சுகமான உரசல்கள்
காற்று பூவை உரச
பூவாசம் கலக்குமே காற்றோடு!
அலைகள் கரைகள் உரச
கரையும் கரையுமே நீரோடு!
ஆதவன் கதிர்கள் உரச
பூமியும் சூடாகுமே வெயிலோடு!
கண்கள் இயற்கையை உரச
மனமும் உருகுமே இயற்கையோடு!
சுகமான சிந்தனைகள் உரச
வார்த்தைகள் கவியாகுமே தமிழோடு!!