புத்தாண்டு வரம்

புத்தாண்டே வருக புதுவாழ்வு தருக
நித்தம் மக்களுக்கு நிம்மதியைத் தருக
தோல்வியை எதிர்கொள்ளும் துணிவைத் தருக
துவண்டபோது கைகொடுக்கும் சொந்தங்களைத் தருக...

வேண்டிய பொழுது மழை தருக
வேண்டாமலும் அருள் தருக
மானவருக்கு படிப்பைத் தருக
படித்தவருக்கு வேலையைத் தருக

உழைப்பிற்க்கேத்த ஊதியம் தருக
உழைக்காதவருக்கு புத்தியைத் தருக
தமிழன் வாயில் தமிழ் தருக
தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவனைத் தருக

பணம் வேண்டா வாக்காளனையும்
தன்மண்னைச் சுரண்டா தலைவனையும் தருக

இத்தனையும் கேட்ட என் கவிதைக்கு
கொஞ்சம் Like ம் தருக.......

எழுதியவர் : கோ.கலியபெருமாள் (1-Jan-18, 11:30 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : puthandu varam
பார்வை : 156

மேலே