ஹைக்கூசென்ரியு
சென்ரியு - 10
============
1.
குடும்ப வக்கீல்
பல முறை கேட்கிறார்
வாய்'தா
2.
குறட்டை பிரச்சனை/
மனைவி கேட்டு வாங்குகிறார்/
விவாகரத்து பத்திரம்
3.
மூச்சு திணற திணற
இரவில் அடிக்கிறார்
கொசு மருந்து
4.
தேடி எடுத்து /
ஆயுத பூஜைக்கு வைக்கிறார் /
பொறியியல் பட்டம்
5.
தலை,கால் புரியாமல்/
கோபமாக கையை வெட்டுகிறார் /
தையல்காரர்
6.
பொருள் விற்றபின்/
அடிக்கடி வழுக்கி விழுகிறார்/
வாழைப்பழ வியாபாரி
7.
சுத்தி பார்த்து
குழி பறிக்கிறான்
முதல் பந்தியில்
8.
கொத்தனார்
மெல்ல கட்டுகிறார்
சித்தாளுக்கு தாலி
9.
அனாதை இல்லம்/
அன்பளிப்பு வழங்கிச் செல்கிறார் /
மேலும் ஒரு குழந்தை
10.
தினம் ஒரு வேஷம்
உடுத்திய நிலையில்
கடவுள் சிலை
-J.K.பாலாஜி-