தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி6

மனதின் போர்(The War of Mind) புத்தகம் எழுதி முடித்த நிலையில் அதீஃபாவும், கலீலும் அதைப் பதிப்பிக்க பதிப்பகங்களை நாடினார்கள்.
யாருமே அதைப் பதிப்பிக்க முன்வரவில்லை.
அந்நூலைப் பதிப்பிக்கும் தைரியமும் இல்லை.

ஆனால், இருவரும் சளைக்காமல் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் அதீஃபா இணையத்தில் உலாவிய போது ஒரு பதிப்பகத்தின் விளம்பரம் வந்தது.

அதிலிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டாள்.

" ஹலோ. "

" ஹலோ! இது அன்பு பதிப்பகமா? ",என்று அதீஃபா கேட்க,
" ஆம். அன்பு பதிப்பகம் தான். நான் அதன் பொறுப்பாளர் சிவா பேசுகிறேன். ",என்று மறுமுனையில் இருப்பவர்.

" என் பெயர் அதீஃபா. என் தோழர் பெயர் கலீல். பாகிஸ்தானில் சிந்து நதிகரையை ஒட்டிய கிராமத்தில் வசித்து வருகிறோம்.
நாங்கள் ஒரு நூல் எழுதி இருக்கிறோம். அதைப் பதிப்பிக்க வேண்டும்.
எங்கள் நாட்டில் பதிப்பிக்கப் பயப்படுகிறார்கள். மறுக்கிறார்கள். உங்களால் எங்களுக்கு உதவ இயலுமா? ",என்றாள் சந்தேகத்தோடு.

" நிச்சயமாக உதவுகிறேன் சகோதரி. உங்கள் புத்தகத்தின் பெயரென்ன? ",என்றார் சிவா.

" மனதின் போர் (The War of Mind) ",என்றாள் அதீஃபா.

" பெயர் சிறப்பாக உள்ளது. அதில் உள்ளே அடங்கியுள்ள கருத்துகளை பதிப்பாசிரியர் என்ற முறையில் மதிப்பீடு செய்ய வேண்டுமே.. "

" உங்களுடைய மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கிறேன். "

" அதோட உங்களுடைய புகைப்படங்களையும் பெயருடன் அனுப்பி வையுங்கள். புத்தகத்தில் பதிவிட வேண்டும். "

" ம்ம் சரிங்க. ",
என்ற அதீஃபா தொடர்பைத் துண்டித்துவிட்டு அந்த விளம்பரத்தில் இருந்த மின்னஞ்சல் முகவரிக்கு புத்தகத்தின் மென்பிரதியை அனுப்பி வைத்தாள்.
அதோடு போட்டோகளும் சேர்க்கப்பட்டு இருந்தன.

மின்னஞ்சலை எதிர்பார்த்திருந்த சிவா அது வந்ததும் அந்த மென்பிரதியைப் படித்துப் பார்த்தார்.

அதைப் புத்தகமாக நிச்சயம் பதிப்பிக்க வேண்டும் என்று எண்ணியவர், பதிப்பு செலவை அவர் தன் சொந்தக்கணக்கில் எழுதிக் கொண்டார்.

முதல் புத்தகம் பிரதியானது. அதை சிவாவிடம் மதிப்பிட்டிற்காக காட்ட அப்துல்லா வந்தார்.
புத்தகத்தை வாங்கிப் பார்த்த சிவா, எல்லாம் சரியாக உள்ளதா என்பதை பார்வையிட்டுவிட்டு அதில் பதிந்து இருந்த கலீல் மற்றும் அதீஃபா புகைப்படங்களைக் கண்டார்.

கலீலின் முகத்தைப் பார்த்தவர் சற்று அதிர்ச்சியடைந்தார்.
புத்தகத்தின் பிரதிகளை அச்சிட்டு பத்திரமாக வைக்கும்படி அப்துல்லாவிடம் சொல்லிவிட்டு, தனது கிராமம் நோக்கி இரயிலில் பயணம் புறப்பட்டார்.

இரயிலில் பயணம் முடிவடைய இரயில் நிறுத்தத்தில் இறங்கி தன் கிராமம் நோக்கி நடக்கலானார்.

அழகு எழிலொச்சும் கிராமம் தான் அது.
நல்லவர்கள் வாழ்ந்தாலே கிராமம் சொர்க்கமாகும்.

ஜோசப் இருசக்கர வாகனத்தில் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காவி உடையில் சிவா புதுமையாகப் புலப்பட தன் வாகனத்தை நிறுத்திய ஜோசப், " ஐயா தாங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்? ",என்று கேட்டார்.

" ஐயா, நான் ஒரு நாடோடி. இந்த கிராமத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்தேன்.
மீண்டும் அதைக் கண்டு செல்ல வந்தேன். ",என்றார் சிவா.

இந்தப் பதில் ஜோசப்பைக் கவர வண்டியில் ஏறிக் கொள்ளச் சொன்னார்.
அன்பை மறுக்காத சிவா வாகனத்தில் ஏறிக் கொண்டார்.

ஊருக்குள் இறக்கிவிட்டார் ஜோசப்.
நன்றி சொல்லி புறப்பட்ட சிவா அசோக்கின் வீடு நோக்கிச் சென்றார்.

வீட்டு வாசலில் நின்று, " அம்மா, அம்மா! ", என்று அழைத்தார்.

சத்தம் கேட்டு சித்ரா வாசலுக்கு வந்தாள்.
அங்கு நின்றிருந்த காவியின் முகத்தை உற்றுப் பார்த்தவள், " வாங்கண்ணே! ", என்று அழைத்துவிட்டு, வீட்டுக்குள்ளே சென்று, " அம்மா! அப்பா! சிவா அண்ணே வந்திருக்கான். வந்து பாருங்க. ", என்றிட சுப்புராஜ் தன் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டு ஏறிட்டுப் பார்த்தார் சோபாவில் இருந்தபடி...

சமையலறையிலிருந்து வந்தார் கஷ்தூரி அம்மா.

வந்தவர், " என்னடா உயிரோட இருக்கோமா? இல்ல செத்துட்டோமானு? பார்க்க வந்தியா? ", என்று கடுகடுத்தார் கஷ்தூரி அம்மா.

" ஏன்மா வந்ததும் வராததுமா அண்ணனைத் திட்டுற? ",என்று அண்ணன் பக்கம் பேசினாள் சித்ரா.

" விடு சித்ரா. அம்மா நல்லா திட்டட்டும். இந்த வார்த்தைக் கேட்காமல் எவ்வளவு நாள் தவிச்சுருப்பேன். ",என்றர் சிவா.

" சரி, இப்போ என்ன விடயமா வந்துருக்க? ",என்று சுப்புராஜ் கேட்க, " தம்பி அசோக்கை எங்க? ",என்றார் சிவா.

" தம்பி மேல இப்போ தான் பாசம் வருதா, அவன் இராணுவத்துல போய் காணாப் பொணமான பின் வந்து கேட்குற. ", என்று சுப்புராஜ் கூறினார்.

" இல்ல, தம்பி சாகல. ",என்று சிவாவின் மனம் உண்மையைச் சொல்லத் துடிக்க மிகவும் அமைதியாகிவிட்டார் சிவா.

ஆழமாகச் சிந்தித்தார்.

" தம்பி பகைமை நாட்டில் இருக்கிறான்.
அவன் அசோக் தானாயென்றும் தெரியல. அதனால அவனை உயிரோட இங்க கொண்டு வர வரைக்கும் அது யாருக்கும் தெரியவேண்டாம் ",என்று சிவா தீர்மானித்துக் கொண்டார்..

" ஹேய் சித்ரா! உங்க அண்ணனை சாப்பிடச் சொல்லு. ",என்றார் கஸ்தூரி அம்மா.

" கைகழுவி விட்டு வாங்கண்ணே! சாப்பிடலாம். ",என்று சித்ரா அழைக்க, கைகளை அலம்பிவிட்டு வந்து அமர்ந்தார் சிவா.

உணவு பரிமாறப்பட்டது.
சாப்பாடு முடிந்ததும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
பிறகு தூங்க செல்ல, சிவா அசோக்கின் அறையில் சென்று படுத்தான்.

மலரும் நினைவுகள் மனதிலே உலாவிக் கொண்டே இருந்தன.

சிறுவயதில் அசோக்கும், சிவாவும் அந்த அறையில் தான் படுத்திருப்பார்கள்.

அதோடு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த ஆனந்தமான குடும்பத்தில் நடந்த அந்த மிகவும் வேதனையான விஷயம்.
அந்த விஷயத்தாலேயே சிவா தன் குடும்பத்தையே பிரிந்து வாழ்ந்து வருகிறான்.

சிவாவின் கடந்தகாலம்.....

அசோக், சிவா ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிள்ளைகள்.

சிவா மூத்தவன்.
அதே போல் முரடனும் கூட.
தப்பு நடந்தால் அதைத் தட்டிக் கேட்க முதல் ஆளா அங்க இருப்பான்.

அதனாலேயே அவன் மேல் பெற்றோருக்கு அதிக வெறுப்பு உண்டாயிற்று.

அசோக் சமத்துப் பையன். அதனாலேயே தினமும் அசோக்கை எடுத்துக்காட்டி, சிவாவிற்கு உபதேசம் நடக்கும்..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Jan-18, 7:23 pm)
பார்வை : 174

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே