ஜெயலலிதா இன்னொரு அம்மா
மேகம் இருள் சூழ வெடித்திட்ட மின்னல் நீ
தாகமது தீர திறந்துவிட்ட மழை நீ
வேண்டும் வரை பசி தீர்த்த பெண்மை நீ
போதும் என்ற மனம் கொண்ட பெருந்தகை நீ
எல்லார் வயிற்றிலும் பிறக்கின்ற குழந்தை நீ
அதற்க்கும் பாலூட்ட அறை கட்டிய கருவறை நீ
இலங்கைத்தமிழரின் இன்னல் தீர்த்த கடல் நீ
ஈடு கட்ட முடியாத எதிர்க்கட்சித்தலைவி நீ
பொத்தி பொத்தி வளர்க்கின்ற தமிழ் நாட்டின் செல்வம் நீ
ஆளுமையில் முதலாம் அதிகாரம் நீ
மத்திய அரசை நம்பாத தமிழ்நாட்டு அரசி நீ
இன்று
ஏனோ தேசியக்கொடி போர்த்திய தெய்வம் நீ
கண்ணீருடன்,
எழுத்து,
ஜெகன். G