நத்தார்_பரிசு

#
==============
கிறிஸ்மஸ் சோடனையால் வீடே மங்களகரமாக இருந்தது இருந்தாலும் குமாருக்கும் வதனிக்கும்
தொலைந்த மகனின் நினைவலைகள்
தீயாக வந்து தாக்க

குமார் தேவலயத்துக்கு சென்றால் மனம் தெளிவாகும் போய் வருவோமா எனக் கேட்க
மனைவியும் சம்மதம் சொல்ல
தேவாலயம் சென்றனர்.

அங்கே தங்களின் கவலைகளை
இயேசு பாலன் முன்பு கண்ணீர் விட்டு அழுது பாரத்தை இறக்கி வைக்கும் போது நல்ல செய்தியாக மணியோசை கேட்கவும் இனம் புரியாத சந்தோசம் வதனியின் இதயத்தை அடைந்தது

அப்பொழுது மனைவி வதனி
அப்பா கடற்கரைக்கு சென்றுவிட்டு போவோமா
மனம் அங்கு போகவேண்டும் என விருப்பம் கொள்கிறது எனக் கூற

குமாரும் மனைவியின் சந்தோசத்துக்காக சரி போவோமென்று அங்கு போனான்

அன்று விடுப்பு நாள் என்றதால்
வழமையை விட மக்கள் அலை மோதிக்கொண்டு இருக்க

தனியாக நின்று ஒரு குழந்தை அழுவதை பார்த்த அவர்கள்
மனம் இரங்கி குழந்தையை சமாதானப்படுத்தி விட்டு எப்படியாவது குழந்தையின் தாய் தந்தையை கண்டு பிடித்து கொடுக்க வேண்டுமென தேட தொடங்கினர்

அங்கே (அதிர்ச்சி காத்திருக்குமென எதிர்பார்க்கவில்லை) இளைஞன் ஒருவன் காயங்களோடு இருக்க மக்கள் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். என்னவென்று பார்ப்பதற்கு அவ்விடத்தை நோக்கி செல்லவே
குழந்தையும் அப்பா அப்பா என அழத்தொடங்கியது நிலையை உணர்ந்து
கொண்ட குமார் வேகமாக செயற்பட்டு வைத்தியசாலையில் அந்த இளைஞனை சேர்த்தான்.

இளைஞனின் காயங்கள் மாறும் வரை குழந்தையையும் தங்களோடு வைத்து இருந்தனர்
ஒருநாள் குழந்தை தன் தந்தையின் சிறு வயதுப்படம் வீட்டில் இருப்பதை கண்டு எப்படி உங்களிடம் இருக்கிறது என்று குமாரிடம் கேட்டகவே
இது உங்கட அப்பா இல்லை சிறு வயதில் எடுத்த என் மகனின் படம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

குழந்தையும் இதை அப்பாவிடம் கேட்க வேண்டுமென நினைத்து வதனியிடம் சென்று அடம் பிடித்து வைத்தியசாலைக்கு சென்றது. அங்கே தாய் தந்தையோடு இருக்கும் சிறுவனைக் காட்டி
அப்பா இது நீங்கள் தானே என்று கேட்கவும் ஆனந்த மிகுதியில் குழந்தையை கொஞ்சிவிட்டு இது நான் தான் இந்த படம் எப்படி உனக்கு கிடைத்தது செல்லம் என்று கேட்கவும் குழந்தை இந்த வதனி அன்ரி வீட்டில் தான் இருந்தது என்று கூறவும்

வதனியை நோக்கி
இது நீங்களா? என்னுடைய அம்மா நீங்களா??
எனக்கேட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினான்.

கதையை கேட்டு கொண்டு இருந்த வதனியும் இயேசு பாலனே அவதரித்த திருநாளில் தொலைந்த சந்தோசம் மீண்டும் வந்ததே என எண்ணி மகனை கட்டியணைத்தாள்

எழுதியவர் : காலையடி அகிலன் (13-Jan-18, 10:38 am)
பார்வை : 84

மேலே