தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி8

" அடப்பாவிகளா! நீங்கள் சண்டை போட்டு தன்மானம், வீரம்னு என் மகனைத் தீக்குளிக்க வைச்சுட்டீங்களே,
நீங்களெல்லாம் நல்லாவே இருக்கமாட்டீங்கடா. "

அந்தக் கட்சி அலுவலகத்தின் முன், ஒரு வயதான பெற்றோரின் கதறல்...

யாருமே கண்டுக்கவில்லை.
கடந்து பொய்க்கிட்டே இருக்காங்க.

அந்த வழியாக பைக்கில் வந்த கண்ணன் அந்த தம்பதியர் அழுவதைக் கண்டு, தன் நண்பன் சிவாவிற்கு கால் பண்ணான்.

" ஹாலோ. "

" டேய் சிவா! நான் கண்ணன் பேசுறேன். இந்த சிவப்பு, கருப்பு கட்சி அலுவலகத்தின் முன்னாடி ஒரு வயதான பெற்றோர் அழுதுட்டு இருக்காங்க. "

" நீ அங்கேயே இரு. நான் வந்துடுறேன். ",என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப, அசோக்குப் புரிந்தது ஏதோ பிரச்சனையென்று.

நேராக பட்டிணத்தில் கட்சி அலுவலகத்திற்குச் சென்றான். அங்கு அந்த வயதான பெற்றோர்களிடம் நடந்ததைக் குறித்து விசாரித்தான்.

நடந்ததைக் கூறிய பெற்றோர் தங்களுடைய ஒரே ஒரு மகனையும் கட்சி பெயரில் மதப்பிரச்சனைக்காக எரித்துக் கொன்றுவிட்டார்கள் என்று சிவாவிடம் கூட கண்கள் சிவந்தான்.

அப்போது, அங்கு வந்த கட்சி ஊழியன் வந்து, " நீங்க இன்னும் போகலையா? ஓ! ஆவலாதி சொல்றீங்களா? எவனும் எதுவும் பண்ண முடியாது. இருங்க, நாய் பிடிக்கற வண்டியை வரச் சொல்லி இருக்கேன். வந்ததும் அவங்களே பிடிச்சுட்டுப் பொய்டுவாங்க. ", என்றவுடன் உச்சக் கட்டச் சூரியனின் கோபம் தலைக்கேற சிவா ஓங்கி அறைந்தான் காதோடு.
தாக்குதலின் வேகம் தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டு விழுந்தான் மதியிழந்து பேசியவன்.

அடிவாங்கி விழுந்தவனைத் தொடர்ந்து அடி வாங்க, அலுவலகத்திலிருந்து இரவுடி வெள்ளை வேஷ்டிகள் கைகளில் ஆயுதஙகளோடு சுற்றி வளைத்து ஒன்றாக வந்து தாக்க, அவ்விடம் விட்டு எளிதாக தப்பினான் சிவா.
தாக்க வந்தவர்களுக்குள்ளேயே தாக்கிக் கொண்டார்கள்.

சிலருக்கு கைகளில் வெட்டுப்பட்டன,
சிலருக்கு மண்டை உடைந்தது.
சிலருக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது.
வீரமா வந்தவர்களெல்லாம் கீழே சாய, சிவா கட்சித் தலைவன் பக்கம் திரும்பினான்.

அந்த வயதான பெற்றோர்களுக்கு நஷ்ட ஈடாகப் பணம் தருவதாகச் சொன்னான் கட்சித் தலைவன்.

" பணம் வேண்டாம். அவன் உயிரைத் திருப்பிக் கொடு. உடம்பில் தீப்பற்றி எரியும் போது அந்த வேதனை எப்படி இருக்கும்னு உனக்கு தெரியுமா? ", என்று கேட்ட சிவா பெட்ரோல் கட்சித் தலைவனின் தலைக்கு ஊற்றி தீயைப் பற்ற வைத்தான்.

தகவல் அறிந்து ஏ.சி. ஜெகன் அங்கு வந்தார்.
கட்சித் தலைவரின் மேல் எரிந்த தீ அணைக்கப்பட்டு, உடலெல்லாம் இரணமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரவுடிகளெல்லாம் நாய் பிடிக்கிற வண்டி வந்ததும் அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

" என்ன நடந்தது? ",
என்று ஜெகன் விசாரிக்க யாரும் வாயைத் திறக்கவில்லை.

" யாரும் சாட்சி சொல்ல வரவில்லை என்று ரொம்ப சந்தோஷப்படாத. ஒரு நாள் உன்னை கைது பண்ணுவேன். ",என்று ஏ.சி.ஜெகன் சிவாவை மிரட்டிவிட்டுச் சென்றார்.

வயதான பெற்றோர் வந்து, " நன்றி ஐயா. நீ நல்லா இருக்கனும். ",என்று கூறிவிட்டுச் செல்ல, சிவா தான் நண்பனோடு கிளம்பினான்.

தன் வீட்டிற்கு வந்த சிவா, பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே செல்லுகையில், " நில்லுங்க அண்ணா. இன்னைக்கு என்ன பண்ணிட்டு வாரீங்க? ",என்று கோபமாகக் கேட்க, " வயதான பெற்றோருடைய ஒரே ஒரு மகனையும் பலி கொடுத்த மிருகங்களைப் முடமாக்கி வாறேன். ",என்று சிவா கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில், " நில்லுடா. உனக்கு மூனு வேளையும் சாப்பாடு கிடைக்கப் போய் தான சும்மா இருந்துட்டு ஊர் வம்பை விலைக்கு வாங்குற. இனி நீ வேலைக்கு போய் சாம்பாதிச்சுட்டு வந்தா தான் சாப்பாடு. ",என்று கோபமாய் பேசினார் சுப்புராஜ்.

புன்னகையோடு உள்ளே சென்ற சிவா மொட்டை மாடியில் போய் இருந்தான்.

அவனால் அவன் தந்தையை எதிர்த்துப் பேச முடியும்.
ஆனால், அப்படி செய்யவில்லை.
அமைதியாக இருந்தான்.

" ஏடி சித்ரா! இந்தா சாப்பாடு. சிவா அண்ணனுக்குக் கொடுத்துட்டு வா. ",என்று கஸ்தூரி அம்மா கூறினார். சித்ரா சாப்பாட்டை எடுத்துக் கொண்டு படிக்கட்டில் ஏறினாள்.

" அசோக்! அசோக்! ",என்று கஸ்தூரி அம்மா அழைக்க, " என்ன அம்மா? ", என்றவாறு வந்தான் அசோக்.

" இதை உன் அண்ணன் கிட்ட கொடுத்துட்டுவா. ",என்று கொடுக்க வாங்கிக் கொண்டு படியை நோக்கி நடக்க, " என்னடா அது? முட்டைப்பொரியலா? கொண்டு கொடு. நல்லா சாப்பிட்டு தெம்பா இன்னும் சண்டை வளர்க்கட்டும். ",என்று சுப்புராஜ் கூறினார்.

அசோக் சிரித்துவிட்டு மேலே சென்றான்.

அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் சிவா. முட்டைப் பொரியலைக் கொண்டு வைத்தான் அசோக்.

எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு சிவா நிலவைப் பார்த்தவன் வெளியே கிளம்பினான்.
அசோக்கும் உடன் வந்தான்.

பேசிக் கொண்டே சென்றார்கள்.

அங்கே ஒரு தள்ளுவண்டிக் கடையில் சுக்குக்காப்பி குடித்துக் கொண்டு இருந்தார்கள்.

" அண்ணா, அண்ணி பார்க்குறாங்க. ",என்றான் அசோக்.

சிவா திரும்பிப் பார்த்தான்.

வீட்டின் மொட்டைமாடியில் கையில் புத்தகத்துடன் ஒற்றை விளக்கு வெளிச்சத்தில் வெள்ளைநிற ஆடையில் அந்த தேவதை நந்தினி அமர்ந்து இருந்தாள்.

சிவா திரும்பிப் பார்த்ததும், சிவாவை நோக்கி, " ஹாய்! ",என்று சைகைக் காட்டினாள்.

" டேய் தம்பி! இதெல்லாம் சரியா வராதுனு நீயாவது அவளுக்கு புரிய வைடா. ",என்றான் சிவா.

" உங்களுக்குப் பிடிக்கவில்லையா அண்ணா? "

" பிடிக்கும். ஆனா! "

" என்ன ஆனா! சின்ன வயசுல இருந்து உங்கள எனக்கு தெரியும் அண்ணா.
நீங்க ரெண்டு பேரும் சரியான ஜோடி.
நான் சொல்லறதைச் சொல்லிட்டேன்,
இன்னும் உங்க காதலை வைக்காதீங்க அண்ணா மூடி.
அப்புறம் வைக்க வேண்டி வரும் தாடி. ",என்று அண்ணனுக்கு தம்பி உபதேசித்தான்.

" சரி தான். நாளைக்கே சொல்லிருவேன். ஆனா, கொஞ்சம் பயமா இருக்குடா. "

" ஏன் அண்ணா? "

" அவ தங்கச்சியோட ப்ரண்ட் வேற. அதுவும் போக என்னை முரடனா நினைச்சு திட்டி இருக்கா. "

" ஹாஹா. இந்த விடயத்தில் நீங்க சரியான டியூப் லைட் அண்ணே! ", என்று அசோக் கிண்டலடிக்கச் சிவா புன்னகைத்தான்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Jan-18, 12:22 pm)
பார்வை : 193

மேலே