புதியதோரு விடியல்

பணத்தை தவிர வேறு
குறையில்ல கூரைவிட்டு பெண்,
இன்னும் குழந்தையாக பார்க்கும்
பெற்றோர் பெற்ற பெண்,

மலராயிருந்தும் கனவு கண்டேன்
மனம் போல் வாழ்க்கை அமையுமென்று,

சருகாய் மாற்றி கனவை ஏரிக்கின்றேன்
வாழ்வை பணம்தான் முடிவு செய்கிறது என்று,

இதயக்கூட்டில் கறையிருந்தால்
ஏற்றுக்கொள்கிறேன்,
ஏழைவீடே குறையென்றால்
எங்கே சென்று முறையிடுவேன்,

புலம்பியெதும் பயனில்லை
புறக்கணிக்கும் சமூகத்தில்,
முடங்கிக்கிடப்பதால் பலனுமில்லை
மிதிக்கும் இந்த உலகத்தில்


உள்ளத்தில் உறுதியிருக்கு,
உழைப்பில் நம்பிக்கையிருக்கு,
கையில் வலுவிருக்கு,

பாரதியின் புதுமை பெண்ணாக
எடுத்துவைக்கிறேன் முதல் அடியை
புதியதோரு விடியலைத் தேடி........

எழுதியவர் : செ.நா (25-Jan-18, 8:57 pm)
பார்வை : 1108

மேலே