புதிய இந்தியா
புதிய இந்தியா!
சுதந்திரம்..
சமூகத்தின் அங்கீகாரம்..
தனி மனிதனின் உரிமை!
உழைக்கும் வர்கம் என்றும் தாழ்த்தப்பட்டு..
பெண்கள் வீட்டிலும் நாட்டிலும் ஆதரவற்று..
அரசாங்கம் சங்கிலிகளில் அகப்பட்டு..
அடிப்படை வசதிகளும் வருமானமும்
சுமைதாங்கியாக சபிக்கப்பட்டு..
இது அன்றோ விடுதலை !?!
சுதந்திர தினம்..
குடியரசு தினம்..
இவை இப்போதெல்லாம்
விடுமுறை நாட்களாக மட்டுமே
காட்சியளிக்கிறது!
அன்று விடுதலை பெற
நாம் பெற்ற வலியை விட..
இன்று அதை பேணிக் காத்து,
அதை நல் வழி படுத்த
படும் பாடு அட அட!
என்று பெண்கள் தங்கள்
வீடுகளிலும் வீதிகளிலும்
தன் சுய மரியாதையை
இழக்காமல் வாழ்கின்றனறோ
அன்று தான் பிறந்திடும்
புதிய இந்தியா..
பிரசவிக்க காத்திருப்போம்!