என்ன செய்தாய் -2
ஆறு மாதம் முன்னால்
நீ யாரு என்று கூட
எனக்கு தெரியாது என்பதை
சத்தியமாய் என்னால்
நம்ப முடியவில்லை
இப்போது
நீயில்லாமல் அப்போது
எப்படி இருந்தேன்
அது நான் தானா
என்ற சந்தேகத்தில்
நான்
உன்னை தேடி தேடி
தவித்து அலையும்
என் இதயம்
அப்போது என்ன
செய்து கொண்டிருந்தது
அது நான் தானா
என்ற சந்தேகத்தில்
நான்
பிறந்த குழந்தை
தாய் மார்பை
சதா தேடித்தேடி
ஒண்டிக் கொண்டிருப்பதைப்போல
என் மனசு
சதா உன்னையே
உன்னை மட்டுமே தேடிக்கொண்டிருக்கிறது