தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி12

"சிவா அண்ணே! எங்க போனீங்க? உங்கள எங்கெல்லாம் தேடுறது!"
சித்ரா கோபமாகக் கேட்டாள்.
"நான் சிவா அண்ணன் இல்ல. அசோக்.",என்றான் அசோக்.
"இது உண்மையா?! நீங்க அசோக்கா?",என்றாள் சித்ரா வியப்பாக.
"அட! ஆமாமா. அவன் அசோக் தான்.",என்றபடி வந்தான் சிவா.
உடனே, சித்ரா, "அப்பா, அம்மா! அசோக் அண்ணன் வந்திருக்கான்.", என்று அழைக்க, சமையல் அறையில் இருந்து வெளிவந்த கஸ்தூரி அம்மா அசோக்கைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தி அன்பு மழை பொழிந்தார்.
சுப்புராஜும் வந்து கண்ணீர் சிந்தி நின்றார். அசோக்கும், சிவாவும் நடந்ததை விவரித்தனர்.
குடும்பம் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்தது.

சுப்புராஜ் சிவாவைத் தனியாக அழைத்து பேசினார்.
"உன் தம்பி நடந்ததைப் பற்றி என்ன நினைக்குற சிவா?", என்று சுப்புராஜ் கேட்க, "நானும் அதைப் பற்றி தான் பா யோசித்துக் கொண்டு இருக்கேன்.",என்று சிவா சொன்னான்.
"இனி என்ன நடந்தாலும் சரி, உன் தம்பியை விட்டு நீ பிரியக்கூடாது. ",என்று சுப்புராஜ் சொல்ல, "ஆமாப்பா. அன்னைக்கு உன் தம்பிக்காக எங்களை பிரிந்து போனாய். ஆனால், இப்பொ நீங்க ரெண்டு பேருமே ஒன்றாகத் தான் இருக்கனும். இது தான் எங்களொட ஆசை.", என்று கஸ்தூரி அம்மா கூறினார்.
" இனி தம்பியை விட்டு பிரியமாட்டேன்பா. ", என்று சத்தியம் செய்தான் சிவா.

வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிய நேரம், நந்தினிக்கும், சிவாவுக்கும் திருமணம் பேசி முடிவு செய்தார்கள் இருவீட்டாரும்.
அசோக்கிற்கும் நல்ல பெண் கிடைக்கட்டும். கிடைத்ததும் இருவருக்கும் ஒரே மணவடையில் திருமணம் நடக்க வேண்டும் என்று
சிவா சொல்லிட்டான். அதனால், அசோக்கும் பெண் தேட ஆரம்பித்தார்கள் சுப்புராஜும், கஸ்தூரி அம்மாவும்.

அசோக்கிற்கும் அப்பா, அம்மா பார்க்கும் எந்த பெண்ணையுமே பிடிக்கவில்லை. காரணம் என்னவென்று சிவா அறிவான். ஆனால், தன் தம்பியா சொல்லட்டும் என்று நினைத்தான். அசோக் சொல்லவே இல்லை.
ஒருநாள் சிவா, அசோக், சித்ரா, நந்தினி நால்வரும் பேசிக் கொண்டிருக்கையில், சிவா,"ஏன்டா தம்பி! அப்பா, அம்மா பார்க்கிற எல்லாப் பெண்களையும் வேண்டாம் எங்கிறாயே! உன் மனசுல என்ன தான்டா இருக்கு. சொன்னால் தானே தெரியும்.",என்று கேட்டான்.
"அப்படிலாம் ஒன்னும் இல்லங்கண்ணா. உங்களுக்கு தெரியாமலா?", என்றான் அசோக்.
அப்போது, சிவாவின் கைபேசி ஒலித்தது. சிவா கைபேசியில் பேசிக்கொண்டே அங்கிருந்து செல்ல, சித்ரா," அண்ணா மறைக்காமல் சொல்லுங்க.",என்று கேட்க, அசோக் ," டென்ஷன் ஆக்காமல் சும்மா இரு. ",என்று கோபப்பட்டான்.
அசோக் இப்படி கோபப்பட்டது இது தான் முதல் தடவை. சரியென்று சித்ரா எழுந்து சென்றாள். நந்தினியும் பேசவில்லை.
நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் இரவு அசோக்கின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்ற அசோக், " ஹலோ! யார் பேசுறது?", என்று கேட்டான். மறுமுனையில்,"நான் அதீஃபா பேசுறேன்.",என்றது அக்குரல்.
"ஹேய்! எப்படி இருக்க?",என்றான் அசோக். " ம்ம். நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?",என்று கேட்டாள் அதீஃபா.
"ம்ம். இருக்கேன். "என்றான் அசோக்.
" அப்புறம் வீட்டுல எல்லாரும் நலமா?",என்று அதீஃபா கேட்க, "ம்ம். நலம். அங்கே பாட்டி நலமா? மற்றவர்கள் எல்லாரும் நலமா?", என்றான் அசோக்.
"ஆம். எல்லாரும் நலம். ", என்றாள் அதீஃபா. " சரி, அப்புறம்? ", என்றான் அசோக். " அப்புறம், வேறென்ன? ", என்றாள் அதீஃபா.
"ஒன்னுமில்ல.", என்றான் அசோக். " சரி, அப்புறம் பேசுறேன்.",என்று அழைப்பைத் துண்டித்தாள் அதீஃபா.
அசோக்கிற்கு அதீஃபாவின் பாட்டி அதீஃபா கொடுக்கச் சொன்னதாகக் கொடுத்தப் புத்தகம் ஞாபகம் வர, அப்புத்தகத்தைத் தேடினான் அசோக்.
அவன் அறையில், அவனுடைய தோள் பையில், என்று எங்கு தேடியும் அகப்படவில்லை.

தன் அண்ணன் சிவாவிடம் கேட்க, "ஓஹ்! அந்த புத்தகமா? என் கிட்ட இல்ல. சித்ரா வச்சிருப்பா. போய் வாங்கிக்கோ தம்பி.",என்று சிவா கூறினான்.
சித்ராவிடம் சென்று கேட்டான் அசோக். " எந்தப் புத்தகம் நான் பார்க்கல. எனக்குத் தெரியாது. ", என்றாள் சித்ரா.
" ஹேய்! தங்கச்சி விளையாடாத. என் வாழ்க்கையே அதுல தான் இருக்கு. ",என்று கெஞ்சினான் அசோக்.
" சரி, உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு. ஆனால் அப்புத்தகம் எங்கிட்ட இல்ல. அண்ணி கிட்ட தான் இருக்கும்.", என்று சித்ரா கூறினாள்.
அப்போது தான் நந்தினி வீட்டினுள் நுழைந்தாள். அவளிடம் சென்று அசோக், " அண்ணி அந்த புத்தகம் உங்களிடம் தான் இருக்குனு சித்ரா சொன்னாள். இருந்தா கொடுத்துடுங்க அண்ணி. ", என்று கெஞ்சினான் அசோக்.
" சாரி, எந்தப் புத்தகத்தைக் கேட்குறீங்கனு தெரியல.", என்றாள் விளையாட்டாக.
" அண்ணி விளையாடாதீங்க.", என்று அசோக் மீண்டும் கெஞ்ச, மறைத்து வைத்திருந்த அப்புத்தகத்தை எடுத்து கொடுத்தாள் நந்தினி.
புத்தகத்தை புரட்டினான் அசோக். அதிலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது.
அதை எடுத்து படித்தான் அசோக்.
அதில்,
" அன்புள்ள கலீலுக்கு,
இக்கடிதத்தைப் படிக்கும் போது நீ தூரத்தில் இருப்பாய். நீ இப்போ அசோக். ஆனால், கலீலாகிய உன்னை நான் நேசிக்க்கிறேன். இதை எப்படி சொல்லுவதென்று எனக்கு தெரியவில்லை. அதனால் இக்க்டிதம் எழுதினேன். I Love You Kaleel.
இப்படிக்கு,
அதீஃபா "
என்று எழுதப்பட்டு இருந்தது.
படித்த அசோக் சற்று கோபமாக " என்னிடம் இருந்து ஏன் இதை மறைத்தீர்கள்? ", என்று கேட்டுவிட்டுத் தனியாகப் போய் அமர்ந்தான்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Jan-18, 11:13 pm)
பார்வை : 220

மேலே