வெறுமை
அவள் வெண்ணிலாவின் வெண்மை
கருங்கூந்தல் அழகி
காந்தக் கண்கள்
சிறை பிடிக்கும் சிரிப்பழகி
நித்தமும் பாேகிறாள் காலையும் மாலையும்
நெற்றிப் பாெட்டைக் காணவில்லை
தாலி கூட தாெங்கவில்லை
தனியாகத் தான் நடக்கின்றாள்
குனிந்த தலை நிமிராமல்
அழகுச் செருக்கென்று அடிக்கடி தாேன்றினாலும்
அத்தனை பதுமை அவள் நடையில் கண்டேன்
தற்கால யுவதிகள் பாேல் மாெடன் அழகின்றி
அடக்கமாய் அலங்காரமின்றி அழகாகவே தெரிகிறாள்
பேரூந்தின் இருக்கையிலும் தனி இடம் தேடுகிறாள்
யார் இவள்?
அந்த வீதியில் நான் நின்றிருந்தேன்
எனைக் கடந்து அவள் பாேனாள்
வந்த வழி எட்டிப் பார்த்தேன்
வயதான தாயவள் வழியனுப்பி காத்திருந்தாள்
கேள்விகளை தாெடுத்தேன்
காதலித்துக் கரம் பிடித்தவன் காணாமல் பாேய்
ஒன்பது ஆண்டுகள் ஓடாேடி விட்டது
ஓயாமல் அலைகிறாள் ஒவ்வாேர் இடமாக
ஒரு பதிலும் இல்லை
இறப்பென்று ஏற்க முடியாது
பிரிவென்றும் தாங்க முடியாது
வெறுமையாய் பாேய் விட்டாள்
விதவையும் இல்லை
வாழவுமில்லை அவள்
யார் என்று நான் சாெல்ல
வெறுமையின் காதலியா........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
