அடக்கம் ஒரு ஆபரணம்

அடக்கம்
மனிதனின் ஆபரணம்
சில நேரங்களில்
மனிதனின் ஆயுதமும் கூட
அடக்கம் அடங்கிப்போவதல்ல
அடக்கியாளும் வல்லமையை
பெற்றிருப்பது...

அடக்கம் என்பது
தன் புலன்களை தானே
அடக்குவது மட்டுமல்ல
தன்னடக்கத்தால் சபையில்
உயர்ந்து நிற்கும்போது
தன்வழியை பிறரும் பின்பற்றும்
வகையில் இருப்பது
புலி சில நேரங்களில்
பதுங்குகிறது
அதுவும் ஒருவித அடக்கமே...

ஆணவம் என்கிறார்கள் அது
அடகத்தின் வாசனை அறியாதவர்களின் மூடச்செயல்
வாழ்க்கையில்
நிலைகள் உயரும்போது
அடக்கம் எனும் ஆபரணத்தால்
தன்னை அலங்கரித்துகொள்ள வேண்டும் தவறினால் உயர்வே
வீழ்ச்சிக்கு வழிசெய்துவிடும்...

மனித குலத்திற்கு
இதிகாசங்கள் வேதங்கள் சொல்லியிருப்பதெல்லாம்
ஆணவம் என்றால் தோல்வி
அடக்கம் என்றால் வெற்றி
அறிந்திருந்தும் கனியை தவிர்த்து
காயை புசிக்கிறோம்...

ஓவ்வொரு மனிதனும்
தான் பிரபலமாகவேண்டும்
தன்னை எல்லோரும் மதிக்கவேண்டும் என்றே நினைக்கிறான்
இந்த நிலையை அடைய
அடிப்படை தகுதி அடக்கம்
என்ற மகுடம் சூட்டிருக்கவேண்டும்...

ஆயிரம் வந்தாலும்
ஆயிரம் போனாலும் மனதில்
சஞ்சலம் கொள்ளாத நிலையே
அடக்கத்தின் மறு உருவம்
அடக்கம் மனிதனுக்கு
சிவப்பு கம்பளம் விரிக்கும்
ஆணவம் தான் நடக்கும்
பாதையில் முட்களை தூவிவிடும்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (31-Jan-18, 9:47 am)
பார்வை : 1408

மேலே