காது எனக்கு ஏன் வைத்தாய்

காது எனக்கு ஏன் வைத்தாய்..?
-------------------------------------

களிமண்ணாய் இருந்தவனே
கட்டிடமாய் மாற்றியவனே
காது எனக்கு ஏன் வைத்தாய்..?
கருமங்களை கேட்க வைத்தாய்..?

பொய்யும் புரணியும்
பொங்கி வழியும் சத்தத்தில்
பொசுங்கி போகிறேன்
மீண்டும் ஒருமுறை..!

கண்ணும் வாயும்
இருந்திருந்தால்
காரி துப்பிருப்பேன்
இவர்களை..!

நஞ்சை மனதில் வைத்து
நல்லவனாக நடிக்கிறான்..!
கொஞ்ச தூரம் நடந்துவிட்டு
கொலை செய்ய பேசுகிறான்..!

தன்வீட்டு தகராறை
தடுத்து நிறுத்த முடியாமல்
என் மீது காது வைத்து
உன் நிலவரம் அறிகிறான்..!

நாலு சுவற்றுக்குள் நடக்குதென்று
நம்பிக்கையாக நீ இருப்பாய்..!
விஞ்ஞானத்தின் வளர்ச்சியில்
உலகம் சுற்றுமே உன் படம்..!

முகம் ஒன்றாக இருக்கட்டும்
முகமுடிகள் வேண்டாமே..!
அகத்தினில் உண்மையிருந்தால்
அழகான வாழ்க்கையாகுமே..!

ந.இராஜ்குமார்

எழுதியவர் : ந.இராஜ்குமார் (31-Jan-18, 12:00 pm)
பார்வை : 123

மேலே