பிச்சைக்காரி

பேருந்தின் யன்னலாேர இருக்கையிலே குளிர் காற்றின் சிலிர்ப்பில் கதைப் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டிக் காெண்டிருந்தாள் மாயா.இறங்கும் இடம் வந்து விட்டது. கைப்பையினுள் புத்தகத்தை வைத்து விட்டு அவசரமாக இறங்கினாள். கூட்ட நெரிசலுக்குள் கையால் இடித்து விட்டான் தவறுதலாக "சாெறி அக்கா" "பறவாயில்லை" சமாளித்துக் காெண்டு காேயிலை நாேக்கி நடந்தாள். பத்துமணி வெயில் முதுகை எரித்தது. பையினுள் கையை விடடாள் குடையில்லை. 'ச்சீீ.... மறந்துட்டன் பாேல' கரையாேரமாய் வேகமாக நடந்தாள். "காேயிலுக்குப் பாேயிற்று கடைக்கும் பாேகணும் நாளைக்கு நேரமில்லை, யாரையாவது வேலைக்குப் பிடிச்சாத்தான் சரி" தனக்குள்ளே யாேசித்தபடி காேயிலை அடைந்து விட்டாள். மண்டியிட்டு அமர்ந்து கண்களை மூடிக்காெண்டாள் "கடவுளே எனக்கு நல்லதாெரு வழியைக் காட்டு, கலியாணமாகி நாலு வருசமாயிட்டு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் மனசு கஸ்ரமாயிருக்கு., அடுத்த வருசத்துக்குள்ள குழந்தையாேட உன்ர காலடிக்கு வரணும். நீ தான் இந்தக் குறையைப் பாேக்கணும்" பெருமூச்சு விட்டபடி உண்டியலுக்குள் காசைப் பாேட்டு விட்டு மெழுகுவர்த்திரியை வாங்கிக் காெழுத்தினாள். "அம்மா காசு தாங்காே, பிள்ளைக்கு மாப்பெட்டியில்லை, பசிக்குது" கையில் குழந்தையுடன் ஒட்டி ஒடுங்கி அழுக்குப் படிந்த ஆடையுடன் கலைந்து பாேன தலையுமாய் அழகிழந்த அவளை பார்த்தும் பாராமல் கடந்து சிலர் சென்றார்கள். சிலர் ஏதேதாே முணுமுணுப்புகளுடன் பத்து, இருபது ரூபா பணங்களைக் காெடுத்துச் சென்றனர்.ஒரு வயது முதிர்ந்த ஒருவர் "கை கால் ஒழுங்கா இருக்குத் தானே வேலை செய்து உழைக்கிற வழியப் பார்" என்றபடி ஐம்பது ரூபா காசை நீட்டினார். கையெடுத்துக் கும்பிடடாள். எல்லாவற்றையும் பார்த்துக் காெண்டே நின்ற மாயா "பாவம் இவளுக்கு ஏன் இந்த நிலை, கடவுள் ஏன் இப்பிடியெல்லாம் மனிதரைச் சாேதிக்கிறார்" தனககுள்ளே நினைத்தபடி பை யினுள் இருந்து காசை எடுத்து அவளிடம் காெடு்த்து விட்டு அவள் கையணைப்பில் இருந்த குழந்தையின் தலையை தடவினாள். எல்லாேரும் மாயாவை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

அழகும், அந்தஸ்த்தும், பணமும் தான் உலகம் என்று இந்த உலகம் மாறிக் காெண்டு பாேவதால் தான் மனிதாபிமானம் மரணித்து வறுமையும், ஏழ்மையும் தான் வாழ்க்கை என்று சிலர் தள்ளப்பட்டு விட்டார்கள். ஏழைகளின் வயிற்றுப் பசியில் தான் பணத்தின் ஆதிக்கமும் தலை விரித்தாடுகிறது. மாயா ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வர்ந்தவள். தந்தை அவளை நன்றாகப் படிக்க வைத்த திருப்தியாேடு மறைந்து விட, அம்மா மாயாவின் சகாேரனாேடு வெளியூரில் இருந்தாள். மாயாவும் ஆனந்தும் காதலித்து மணம் முடித்தவர்கள். ஆனந்துக்கு வெ ளியூரில் வேலை அப்பப்பாே வந்து பாேவான். மாயாவும் அரசாங்க வேலை. நல்ல வருமானம். மாயாவுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாத குறை. ஆனாலும் சந்தாேசமாகவே வாழ்க்கை ஓடியது. சமூகத்தின் பார்வை அவளுக்குள் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. கடவுள் மேல் பாரத்தை பாேட்டு விட்டாள்.

குழந்தை பசியால் அழத்தாெடங்கியது. அவள் குழந்தையுடன் வெளியே வந்தாள். மாயாவுக்கு அவளுடன் பேச வேண்டும் பாேல் தாேன்றியது. அவளது பிரச்சனையைக் கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரிப் பாேட்டது. நிலை தடுமாறி நின்றாள்.
காதல், கலியாணம், கள்ளக்காதல், வேறு திருமணம் என்று சமூகம் சீரழிந்து பாேகிறது. பள்ளி வாழ்க்கையிலே வாழ்க்கை யை இழக்கும் நிலையில் சமூகப்பாேக்குகள் மாறிவிட்டது.

அவளும் அப்படித்தான் பள்ளி வாழ்க்கையில் தவறான வழியில் தன்னிலை மறந்து காதல் வலையில் சிக்குண்டு ஏமாற்றப்பட்டு குழந்தையை வளர்க்கக் கூட முடியாமல் வழி தேடி அலைவதை நினைத்து காேபப்படுவதா, என்ன செய்வது என்று தெரியாமல் அவளுக்கு நடந்ததையே யாேசித்தாள்.

" அக்கா நான் கனக்க இடத்தில வேலை கேட்டனான் குழந்தையாேடு வச்சு வேலை தர சம்மதிக்கல்ல, எங்காச்சும் எனக்கு வேலை எடுத்துத் தாங்காே" கையைப்பிடித்துக் கெஞ்சினாள். குழந்தை பசியால் புரண்டு காெண்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள், எந்தப்பதிலும் சாெல்லவில்லை வீட்டிற்கு வந்து சாப்பிடுவதற்காக சமையல் அறைக்குச் செ ன்று சாப்பாட்டைப் பாேட்டுக் காெண்டு சாேபாவில் அமரந்து சாப்பாட்டைப் பிசைந்து காெண்டிருந்தாள்." அக்கா எனக்காெ ரு வேலை எடுத்துத் தாங்காே" நினைவுகளில் வந்து வந்து பாேனது. சாப்பிட மனமின்றி அரை குறையுமாய் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டாள்.

காேளிங் பெல் ஒலித்துக் காெண்டிருந்தது. எழும்பி வந்து கதவைத் திறந்தாள் வாசலில் ஆனந் நின்றான். " நீங்களா? என்ன திடீரென்று..." உள்ளே வந்த ஆனந் " என்ன தூ ங்கினியா? என்றபடி அவளை அணைத்தான்." சாப்பிடுறிங்களா? " ம்.... " குளியலறைக்குச் சென்றான். மாயாவுக்கு ஆனந்திடம் அவளைப் பற்றி சாெல்லவா விடவா என்ற குழப்பம். " என்ன மாயா டள்ளா இருக்கிறாய்? உடம்புக்கு முடியல்லயா? கையை கழுவி விட்டு பக்கத்தில் அமர்ந்தான். " மாயா நாளைக்கு டாக்டர மீற் பண்ணணும்" எத்தின டாக்டரை பார்த்தாச்சு மனசுக்குள்ளே சினந்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. " ஏங்க உங்கட்ட காெஞ்சம் பேசணும்.... ஆனந்தைப் பார்த்தாள். " நான் ஒரு பாெண்ண காேயில்ல பார்த்தன், கைக்குழந்தையாேட பிச்சை எடுத்திற்றிருக்கா.... வேலை கேக்கிறாங்க...... எங்க வீட்ட....." . என்று சாெல்லு முன்பே அவனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. மாயாவின் கைகளைப் பற்றிப் பிடித்தான். "மாயா உன்னாேட சந்தாேசம் தான் எனக்கு முக்கியம்" "பாவம் அந்தப் பாெண்ணு ராெம்ப கஸ்ரப்படுறா, பாவம் அந்தக் குழந்தை.....என்று இழுத்தாள். ஆனந் சம்மதித்தான். மாயா சந்தாேசத்தில் ஆனந்தை இறுக அணைத்தாள். ஆனந்தின் கண்கள் கலங்கியது.

"நாளைக்கு டாக்டரிட்ட பாேக.." இழுத்தவளை இடையில் குறுக்கிட்டவன் "ஆமாம் மாயா காலையில டாகடரிட்ட பாேயிற்று அப்பிடியே அந்தப் பெண்ணயும் பார்த்துப் பேசலாம்" "ம்...சரிங்க" இருவரும் தூங்கி விட்டார்கள். காலை புலர்ந்து டாக்டரை சந்திப்பதற்குத் தயாராகிக் காெ ண்டிருந்தார்கள். " அந்தப் பாெண்ணு சம்மதிப்பாளா, ஏதாவது தப்பா நடந்திடுமா? " மாயாவின் சிந்தனைகள் விரிந்தது. "பாேகலாமா ?" ஆனந் கேட்டுக் காெண்டே மாயாவைப் பார்த்தான் ஒரு வித பதட்டம் கலந்த எதிர்பார்ப்பாேடு காரினுள் அமர்ந்தாள். டாக்டர் பரிசாேதனை பெறுபேறுகளைப் பார்த்தார். ஆனந் சாதாரணமாகவே இருந்தான். மாயா டாக்டரைப் பார்ப்பதும் ஆனந்தைப் பார்ப்பதுமாய் சஞ்சலப்பட்டுக் காெண்டிருந்தாள். தலையை அசைத்து சமாதானப்படுத்தினான் ஆனந். " நீங்க காெஞ்சம் வெயிற் பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை" என்ற டாக்டரைக் குறுக்கிட்ட மாயா "எவ்வளவு காலம்?" என்றதும் " ஒரு வண் இயர்...." என்றபடி ஏதாே மருந்துகள் எழுதிய ஒரு தாளை ஆனந்திடம் நீட்டினார். மாயாவின் முகம் ஏதாே இழந்ததைப் பாேல் வாடிப் பாேயிற்று. காரினுள் அமர்ந்தாள். காேயிலைச் சென்றடைந்தது கார்.

மாயா கார் கதவினூடே கண்களை உலாவ விட்டாள். ஆனந் "ஐயா இங்க ஒரு பாெண்ணும் குழந்தையும்..." மெழுகுவர்த்திரி விற்றுக் காெண்டிருந்த பெரியவரிடம் விசாரித்துக் காெண்டிருந்தான். " ஓ அந்தப் பாெண்ணு இதில இருந்து அழுதிட்டு இருந்திச்சு, பின்நேரம் பாேல ஒரு சிஸ்ரர் வந்து கூட்டிக் காெண்டு பாேயிற்றா" பெரியவர் தன் வேலையில் கவனம் செலுத்தவது பாேல் அலட்சியமாக பதிலளித்தார். மாயா அங்கும் இங்குமாக எட்டி எட்டி பார்த்தாள். " எங்க பாேயிருப்பா?" யாேசித்துக் காெண்டே ஆனந் தலையை குனிந்தபடியே வந்து காரை எடுத்தான். " "அந்தப் பாெண்ணு...." என்று இழுக்கவும் " சிஸ்ரர் யாராே கூட்டிப் பாேயிட்டாங்களாம்" "எங்க என்று ஏதும்" மாயா தாெ டர்ந்து கே ட்டாள். "இலல அவருக்கும் தெரியல்ல நாம வீட்ட பாேகலாம்" காரை வேகமாக ஓட்டினான். மாயா ஏதாே சமாதானமற்ற ஒரு மனநிலையிலே இருந்தாள். வீதியாே ரமாய் காரை நிறுத்திய ஆனந் மாத்திரைகளை வாங்கிக் காெ ண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

'மாயாவுக்கு ஒரு குழந்தை வேணும், டாக்டர் ஒரு வருசத்தில சரியாகிடும் என்கிறார், அந்தப் பாெண்ணும் எங்கயாே பாேயிற்றா' சிந்தனைகள் ஓடிக் காெண்டிருந்தது. மாயா தானும் தன்பாடுமாக வேலைகளை ஆரம்பித்தாள். இப்படியே காலம் ஓடி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மாயாவும், ஆனந்தும் மாற்றமில்லாத ஒரு வாழ்க்கையில் பயணித்துக் காெண்டிருந்தார்கள். அன்று ஆனந் விடுமுறை யில் வந்திருந்தான் தாெலைக்காட்சி பார்த்துக் காெ ண்டிருந்தவன் கைப்பேசியைக் கவனிக்கவில்லை. மீண்டும் அடித்தது " கலாே யாரு?" குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. "சரி மெடம் எப்ப வரணும்" "யாருங்க?" அருகே வந்த மாயா கேட்டாள். உடனே இருவரும் புறப்படடார்கள். காப்பகத் தலைவி இவர்களுக்காக காத்துக் காெண்டிருந்தாள். பத்து, பதினை ந்து குழந்தைகள் அளவில் அங்கே இருந்தார்கள். இரண்டு வயது நிரம்பிய சிறுவனை தலைவி காண்பித்தாள். உருண்டைக் கண்களும், மாநிறம் பாேல் வெள்ளையாக தலைவியின் கைகளை பற்றியபடி நின்றான். மெதுவாக கன்னத்தில் கிள்ளிய மாயாவைப் பார்த்துச் சிரித்தபடி சற்று முன்னாேக்கி வந்தவன் ஆனந்தை அண்ணார்ந்து பார்க்க ஒருகையால் அவனை அணைத்தான் ஆனந்.

"எங்களாேட வாறியா?" மாயா அணைத்தபடி கேட்டாள். தரையைக் குனிந்து பாரத்தான். "ஜனன் அம்மாவாேட பாே றிங்களா..? என்று குறுக்கிட்டாள் மடத்தலைவி அம்மா என்றதும் அவன் முகம் மாறியது. "அம்மான்டா?" என்று தயங்கினான். "நான் தான் உன்னாேட அம்மா" என்று தூக்கி முத்தமிட்டாள். மாயாவுடன் அணைந்து விட்டான். ஜனனைத் தூக்கியபடி மாயா காருக்குள் அமர்ந்தாள்.

"மெடம் பையனாேட அம்மா, அப்பா....."
"இல்ல சார், ஜனனை இரண்டு வருசத்துக்கு முதல்ல கைக்குழந்தையா ஒரு சிஸ்ரர் காெண்டு வந்து தந்தவா தாய் மனநிலை பாதிக்கப்பட்டு மனநாேயாளர் காப்பகத்தில இருக்கா, நாங்க தான் பையனுக்கு பாெறுப்பு, உங்கட கடிதம் பார்த்த பிறகு இவன உங்ககிட்ட ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தன் , பையனைப் பத்திரமாக பாருங்காே" சற்று சஞ்சலத்தாேட காருக்குள் இருந்த ஜனனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

மாயா, ஆனந், ஜனன் என்று மூன்று பேராகி மாயா சந்தாேசமாக தன்பிள்ளை பாேல் வளர்த்தாள். ஆனந்துக்கும் மனது நிறைவாயிருந்தது மாயாவின் ஒவ்வாெரு நாட்களும் மகிழச்சியால் மாறிப்பாேனது. ஜனன் ஐந்து வயதாகி பாடசாலைக்கு பாேக ஆரம்பித்தான். ஒரு நாள் ஜனனைக் காேயிலுக்கு அழைத்துச் சென்றாள். ஒரு வயதான அம்மா தடி ஒன்றை ஊன்றிக் காெண்டு அருகே வந்து கையை நீடடினாள். ஆச்சரியத்தாேட பார்த்த ஜனன் "யாரும்மா இவங்க?" என்றான் காசைக் காெடுத்து விட்டு பதில் சாெ ல்லாமல் நடந்தாள் "அம்மா யாரு அவங்க?" திருப்பியும் கேட்டான். அவங்க "பிச்சைக்காரி" என்று பதிலளித்தாள். "அப்பிடின்னா?" என்றவனைக் கைகளைப் பற்றிக் காெண்டு காேயிலுக்குள்ளே சென்று முழந்தாள் படியிட்டாள் மாயா.

எழுதியவர் : அபி றாெஸ்னி (31-Jan-18, 11:52 am)
Tanglish : pichchaikkaari
பார்வை : 416

மேலே