மூர்ச்சையற்ற_பொழுதுகள் பகுதி 1

இதயத்தில் சில உணர்வுகளையும் இதழ்களில் பல உளறல்களையும் யாருக்கும் தெரியாமல் ஏற்றி வைத்தவள்.
ஒரு விநாடி பார்த்து விட்டு செல்லும் அவளின் விழி பரிசங்களுக்காக ஒரு நூற்றாண்டு வரை காத்திருக்க வைத்தவள்.
கலைந்து போன கனவுகளின் மீட்சியாகவும்,
உடைந்து சிதறிய நினைவுகளின் நீட்சியாகவும் அவனின் காதல் பயணங்களில் நாமும் பின் தொடர்வோம்..

குளிர்காலத்தில் பனிகளை சுமந்த படி மர இலைகளின் உராய்வில் சுகமாய் இதழ்களை விரித்து மகிழ்ச்சியை அள்ளி கொடுக்கும் பூக்களை விட,
நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் மரங்களிடம் கோபித்து கொண்டு,காற்றின் கோர சூழ்ச்சியால் வீழ்ந்து கிடக்கும் சாலையோர உதிர்ந்த பூக்கள் இன்னும் அழகுதான்.
காதல் என்ற உணர்வு சிலருக்கு தீயின் வெளிச்சத்தில் விழுந்த விட்டில் பூச்சி போலவும்,
சிலருக்கு கும்மிருட்டில் ஒளி தரும் மின்மினிப்பூச்சி போலவும் அமைந்து விடுகிறது..

காதல்.
இந்த உணர்வினை அனுபவிக்காமல் வாலிப வயதினை யாரும் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது.அதற்கு கதையின் நாயகன் மட்டும் விதிவிலக்காய் இருப்பது எந்த விதத்தில் நியாயம்.,
அந்த குற்ற உணர்விற்கு பலியாகாமல் இருக்கவே அவனும் ஹார்மோன்களின் சூழ்ச்சியால் காதலிக்க உந்தப்பட்டிருந்தான்..
காதல் என்ற உணர்வு வரும் வரை அதன் விளைவுகளை முன்னரே சிந்தித்து பார்க்கும் மனநிலையில் இருந்திருக்கவில்லை .அது ஒரு மன வியாதி என்பது யாருக்கும் தெரியாத உண்மைதானே.
அதை கூர்ந்து நோக்கி பாடம் கற்கும் அளவிற்க்கு அவனின் இரண்டும் கெட்டான் விடலை பருவம் பக்குவப்பட்டிருக்கவில்லை.
காதல் உணர்வுகள் வராத அந்த நிமிடத்தின் முன் பொழுதுகள் வரை அவனுக்கும் பெண்களின் மீது எந்த விருப்பும்,வெறுப்பும் இருந்ததில்லை..
காதல் என்ற பொக்கிஷத்தை யாரிடம் பெற்று கொள்ள போகிறோம் அதற்காக எவற்றை எல்லாம் இழக்க வேண்டும் என்பது வரை எதையும் அறிந்திராத வெகுளி பையனாய் வளர்ந்திருந்தான்.
அறியாத பருவம் என்பதால்தான் அவனை அவ்வளவு எளிதில் காதல் வைரஸ் கண்டதும் தாக்கி விட்டதாய் நினைக்கிறேன்.
காதல் நோய் ஏற்படுவதற்க்கான சில அறிகுறிகள் அவனின் இதய எல்லைக்குள் ஊடுருவ தொடங்கியது.
வாழ்க்கை முழுவதும் அன்பால் சூழ்ந்து அதிஷ்டத்தை கொடுப்பவளும், பாலைவன துகள்களில் முதல் மழை துளியாய் விழுந்து வசந்த சோலையாக்குபவளும்,
நீள் வட்டத்தில் உலவும் பூமியை,புதிராய் வந்து எதிர் திசையில் பின்னோக்கி சுழல வைக்க போறவளும்,
நமக்கென்று இறைவன் தன் சக்தியையெல்லாம் திரட்டி அழகு சிற்பமாக்கி படைத்தவளையும்,
தன் அற்ப உயிரினை விழி அம்புகளால் குற்றுயிராய் மாற்றுபவளும்,
தன் உணர்வினை உன்மையாய் கண்ணாடியை விட அழகாய் பிரதிபலிக்க கூடியவள் என்று நம்பும் அன்பின் இராட்சஷியை பார்க்க வேண்டுமா.

அவள் யார்???
அவளின் அவன் யார்!!!!
அறிமுகம் தொடரும்.

எழுதியவர் : சையது சேக் (1-Feb-18, 5:46 pm)
பார்வை : 355

மேலே