தாய்ப்பாசம் பொல்லாதது

கருச்சிறையில் உயிராகி
மாநிறமா நீபொறந்த
உசுருள்ள பிண்டமாக
படுக்கையில நான்கெடந்தேன்

பால்கொடுக்க நான்துடிக்க
மார்புக்காம்பை நீகடிக்க
பிள்ளைப்பாசம் வலிதடுக்கும்
தாய்மையுனக்கு பால்கொடுக்கும்

கைகால நீவிவிட்டு
மூக்கின்வடிவம் எடுத்துவிட்டு
கண்ணுக்கு எண்ணைகட்டி
குளிக்கவைப்பேன் என்கால்நீட்டி

தூக்கத்துல நீயழுதா
தூக்கிவைச்சு பால்கொடுப்பேன்
பால்குடிச்சு நீதூங்க
பக்கத்துல படுக்கவைப்பேன்

கண்ணுக்கழகா நீயிருக்க
காதுகுளிர நீசிரிக்க
அடுத்தபிறவி வேணும்
பெண்ணாக நான்அவதரிக்க !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (7-Feb-18, 11:55 am)
பார்வை : 310

மேலே