ஆதிக்கம்

உங்களை ஆதிக்கம் செய்வது எது?
மனமா? குணமா?
மடியில் உள்ள பணமா?

மனதின் ஆதிக்கம் மடிந்துவிட்டது என்பதை நிரூபிக்கும் விதமாய் பணத்திற்காக, அதிக பணத்திற்காக ஓடும் வாழ்க்கையில் நல்ல குணங்களின் ஆதிக்கம் இல்லாமலேயே போய்விட்டது.

யார் இட்ட சாபமோ நான் இங்கு வந்து பிறந்துவிட்டேன்.

எரியும் சூரியனை விட அதிக வேதனை தரும் உலகம் இது.

தரம் என்பது கேள்விக்குறிதான்.

ஆதிக்கம் செலுத்தும் பணத்தின் தாண்டவம்.
எதிர்மறையான எண்ணங்களும் சேர்ந்து கொள்ள வாழ்க்கை கசந்து கொண்டே செல்கிறது.

நிலை மாற இறைவனை வேண்டுகிறேன், சிறுபிள்ளையாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Feb-18, 8:45 pm)
Tanglish : aathikkam
பார்வை : 1055

மேலே