புரிந்துகொள்வோம் காதலை பற்றி

**** காதல் இன்பம் ****
எனக்கென நீ உனக்கென நான்
இருக்கும் வரை நாம் - நம்
காதலை விட ஒரு அன்பை காண முடியுமா?
காதல் என்ற ஒற்றை வார்த்தையில்
இரு மனங்கள் இனைந்து - நம்
இருவரும் சேரும் நாளுக்காக (காதலிக்காமல்) காத்திருக்க முடியுமா?
காதலர் தினம் என்ற தினத்தில்
நாமிருவரும் புது உலகத்தை கண்டோம்
அவ்வுலகத்தில் நாமும் வாழக் கண்டோம்
அந்த ஒற்றை நாளில் இருக்கும் புது உலகம்
அவ்வுலகமே இவ்வுலகம் ஆகாதா என்ற சிந்தனை கொண்டோம்
காலத்தில் சில (மழை,குளிர்,வெயில்)
காதலில் சில (இன்பம்,துன்பம்,பிரிவு)
நம்மை விட்டு போனாலும் - நம்மிடம்
வந்து சேர நாளாகுமே தவிர
வராமல் போகாது (பணம் போல)
காதல் காலத்தில் காதல் சுகமானதே...!
இனியவை இன்பமே
இனி வராது துன்பமே
காலமும் மாறிடுமே
காதலும் வென்றிடுமே
காதலின் வலிகள் கூட காதல் இன்பம் என்றிடுமே...!
காதலர் தின வாழ்த்துகள்

எழுதியவர் : முஸ்தபா (14-Feb-18, 3:09 am)
Tanglish : kaadhal inbam
பார்வை : 178

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே