நிரவி எடுத்துட்டு ஓடிட்டானே

ஏன்டா நண்பா, ஒரு ஆளுகிட்ட சீட்டுப் பணம் கட்டிட்டு வந்தயே அது என்ன ஆச்சு?
😊😊😊😊
அட போடா அந்த ஆளு பணம் கட்டின எல்லாருக்கும் அல்வா குடுத்துட்டு தப்பிச்சு வெளிநாட்டுக்கு ஓடிப்போயிட்டான்டா.
😊😊😊😊😊
அவம் பேரு என்ன?
😊😊😊😊😊
அந்த ஏமாற்றுப் பேர்வழி பேரு நிரவ்.
😊😊😊😊😊
அந்தப் பேருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
😊😊😊😊
எனக்குத் தெரியாதுடா.
😊😊😊😊
அந்தக் களவாணியாம் பேரு செய்தில கேட்டதிலிருந்து அந்தப் பேருக்கான அர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடிச்சன்டா. அவன் செஞ்ச வேலைக்குப் பொருத்தமான பேருடா.
😊😊😊😊😊
என்னடா சொல்லற?
😊😊😊😊
அதுதான் யாருக்கும் தெரியாம ஓடிப்போயிட்டானே. சத்தமில்லாம, அமைதியா தப்பிச்சுப் போயிட்டானே.
😊😊😊😊
போச்சு நாங் கட்டின அஞ்சு லட்சம். ஏறக்குறைய இருபது கோடியச் சுருட்டிட்டு போயிட்டான்டா அந்த கெரகம் பிடிச்சவன்.
☺☺☺☺
நிரவ் ... அர்த்தம்: Nirav = without sound, quiet, silent. பேருக்குத் தகுந்த மாதிரி வசூலான பணத்தையெல்லாம் நெரவி எடுத்துப்போயிட்டான்டா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😊

சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (16-Feb-18, 1:06 am)
பார்வை : 209

மேலே