முட்டாப்பயலே

விமானம் சுத்தம் செய்யும் துப்புரவு
பணியாள் ஒருவன் ,சுத்தம் செய்ய விமானி அறைக்குள் நுழைந்தான்.
பணி முடித்துவிட்டு திரும்பும் போது
விமானம் ஓட்டுவது எப்படி _முதல் பாகம் என்ற புத்தகத்தை பார்த்தான்,
அதைப் படித்து விட்டு விமானத்தை
ஓட்ட ஆசைப்பட்டான். முதல் பக்கத்தில், "இஞ்சினை இயக்க சிவப்பு பட்டனை அமுக்கவும்"என்று
இருந்தது. அழுத்தினான். ஸ்டார்ட் ஆனது.சந்தோஷப்பட்டு,அடுத்த பக்கம் திருப்பினான். 'விமானம் ஓட நீல பட்டனை அமுக்கவும் 'என்று இருந்தது.அமுக்கினான், ஓட தொடங்கியது. அடுத்த பக்கம் புரட்டினான், விமானம் பறக்க பச்சை நிற பட்டனை அமுக்கவும் என்று இருந்தது. அமுக்கினான், விமானம் மேலெழும்பி பறந்தது. இனி, கீழிறக்க ஆசைப்பட்டு அடுத்த பக்கம்
புரட்டினான். விமானத்தை கீழிறக்க
புத்தகத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரும், மறக்காமல் வாங்கி
படியுங்கள், நன்றி!என்றிருந்தது😂😂
சுத்தம் செய்ய போனவன் சத்தமில்லாமல் அடங்கி போனான் .🛫நீதி 🛫அறிவு கெட்டு அதிக பிரசங்கித்தனம் செய்யாதே!
தகுதிக்கு மீறிய செயலைச் செய்யாதே🙏

எழுதியவர் : பாலமுருகன்பாபு (17-Feb-18, 8:31 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 518

மேலே