சத்தியவான் நம் மனச்சாட்சி

#சத்தியவான்_நம்_மனச்சாட்சி...

சத்தியமே எம் சக்தி...
அகிம்சையே எம் ஆயுதம்...
அநீதிக்குத் துணை நின்று எம்மை எதிர்ப்பவர்களின் கதை முடிந்து போகும்.
அதை செய்து முடிக்க யாம் களமிறங்க வேண்டியதில்லை.
காலமே செய்து முடிக்கும்...

சத்தியவான்கள் வாழ்வதாலே உலகம் இன்னும் நிலைக்கிறது மானிடா.
சத்தியத்தை அழிக்கும் துணிவு கொள்ளாதே மானிடா.

சத்தியம் என்பது அயோக்கியனின் நம்பிக்கைக்கு விசுவாசமாக உண்மையாக இருப்பதல்ல.
தன் மனசாட்சி உண்மையாக இருப்பதே.

ஒருமுறையாவது ஒரு விடயத்திலாவது மனச்சாட்சியோடு உண்மையாக நேர்மையாக வாழ்ந்து பார்.
அடுத்து உன்னால் உன் மனச்சாட்சி விரோதமாக நடக்க இயலாது.
நடந்தால் உன் தலை நிமிராது.
பயத்தில் நாணுவாய்.
இதுவே போதும், நீ அழியக் காரணமாகும்.

திரும்புவது எளிதல்ல.
மனச்சாட்சியோட வாழத்தான் அதிக துணிவு வேண்டும்.

மனச்சாட்சியே தெய்வம்.
பக்குவம் அடைந்தோர்க்கு இது புரியும்.
சத்தியத்திலே ஒரு ஈர்ப்பு கொள்ளும்.
சத்தியம் எங்கிருந்தாலும் அணைத்துக் கொள்ளும்.

பிறப்பால் ஏதுமில்லை.
மனதில் இருந்தே உருவாகிறது அனைத்தும்.
இதுவே சத்தியம்.
நம்பவில்லையா?
கேட்டுப்பாருங்கள் உங்கள் மனச்சாட்சியிடம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Feb-18, 11:45 am)
பார்வை : 669

மேலே