சிறு சிறு கவித்துளி

கந்து வட்டிக்கு
வெந்தது பிஞ்சு
இதயம் சிந்துது கண்ணீர்..

லஞ்சத்தால் உள்ளே போனான்
லஞ்சத்தால் வெளியே வந்தான்
கண்மூடி சட்டம்

விருந்து முடிந்ததும்
ஆரம்பம் ஆனது
உண்ணாவிரதப் போராட்டம்

வாங்கினான் கையூட்டு
சட்டம் போட்டுக் கொண்டது
வாய்ப்பூட்டு

பேச ஆரம்பித்தார் தலைவர்
பேச ஆரம்பித்தது
கூட்டம்

செல்லாத நோட்டை
செல்ல வைத்தது அரசு
பூட்டிய அறைக்குள்

குப்பையைக் கிளறி
தொப்பையை நிரப்பினார்
ஊழல் அதிகாரி

எதிர்த்துப் போராடியும்
முடிவில் வீரமரணம்
குப்பையில் கொத்துக்கொத்தாய் கொசுகள்

எருமைகள் மேய்ந்தன
கிழிந்து போனது
பச்சை சுவரொட்டி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 10:49 am)
பார்வை : 154

மேலே