மௌனம்
மௌனமாய் இரு ..
உன் வார்த்தைகள் பலம் பெறும்...
உதிர்க்கும் வார்த்தைகளும்
மெதுவாய் சிந்தட்டும் ...
மாதுளை முத்துக்கள் சிதறுவதை போல ...
எழும் சொற்களும் பறக்கட்டும்...
தேசிய கொடியில் இருந்து பூக்கள் விழுவது போல...
கடல் அலையாய் சப்தம் வேண்டாம்.
கானக்குயிலாய் பேசுவோம்..
நீ மௌனமாய் இரு...
உன் வார்த்தைகள் பலம் பெறும்...
குறைவான வார்த்தைகளே
நிறைவாய் பேசும்..
பூனையின் நகர்வு..
பூக்களின் உதிர்வு..
மென்மையின் பதிவு..
வார்த்தைகளின் கதவு ..
அடிக்கரும்புக்கு சுவை அதிகம்..
அளவான சொற்களுக்கு பொருள் அதிகம்..
இதை கற்றுத்தருவது வயோதிகம்..
நீ மௌனமாய் இரு...
உன் வார்த்தைகள் பலம் பெறும்...
க நிலவன்..