இதயம் பேசியது
இன்று வரை உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரிந்த அந்த நாட்களின் ஞாபகங்கள்
அலையடித்தாற் பாேல் வந்து பாேகிறது
அங்கும் இங்குமாய் நாமிருவரும்
தாெலை தூரப் பிரிவில் நாட்கள் நகர்கிறது
தேடும் விழிகளுக்கு தேடலில் பதிலில்லை
காத்திருக்கும் எல்லைக்கு முடிவுமில்லை
ஏன் என்று புரியவில்லை
காலம் காெடுப்பது பிரிவு
ஆனாலும் காதலாே காத்திருக்கும்
இதயங்கள் பேசும் இனிய நினைவுகளில்
வாழுகிறாேம் நாமிங்கு ஓருயிராய்
நினைவாய், கனவாய், நிஜமற்ற நிழலாய்
இதயம் துடிக்கும் வரை பேசும்
காதல் நினைவுகளை.