உலகம் காக்கும் மனிதநேயம்

மனிதா
உனக்குள் இருக்கும் 
மதங்களை அப்புறப்படுத்து
உலகம் காக்கும்
மனிதநேயத்தை
உனக்குள் அமல்படுத்து 

அணுஆயுதங்கள் தேவைப்படாது 
மண்ணுலகில்
ஒருபோதும் சிறுப்போரும் வராது 

பிரிவினைகளும் சாதிகளும் அடியோடு அழியும் 
ஏற்றத்தாழ்வும் பயங்கரவாதமும் 
இல்லாமல் ஒழியும்
உன் தாயும்
என் தாயும் ஒன்றே 
உன் மண்ணும்
என் மண்ணும் ஒன்றே 
நீவேறு நான்வேறு
இல்லையென்றே 
இவ்வுலகம் உணர்ந்தாலே
இனி எல்லாம் நன்றே !

எழுதியவர் : சூரியன்வேதா (27-Feb-18, 12:41 pm)
பார்வை : 50

மேலே