சிரியா பூக்கள்-2

தன்னம்பிக்கையை அறியும் வயதில்லை

தன் கை பிடித்து நடக்க யாருமில்லை

ஆகையால்

தானே தேடிக்கொண்ட கை...

அன்பு என்றும் நிரந்திரமில்லை
ஆசை என துளியுமில்லை

அமைதி என்ற ஒன்று கிடைக்க
ஆளுமை தகுதி தலைவர்கட்க்கில்லை


வாழ தெரியவில்லை
வாழ்க்கை என்ன விலை?

ஒட்டிக்கொண்டிருக்கும்
ஓருயிரைத் தவிர என்னிடம்
ஒன்றுமில்லை...
-ஷாகி-

எழுதியவர் : ஷாகிரா பானு (27-Feb-18, 12:03 pm)
பார்வை : 167

மேலே