Maanida

மானிடம் எங்கே
மனிதா...
வேதங்கள் சொல்லும்
பாடங்கள் பள்ளிப்
படிப்போடு முடிந்தே
போய்விட்டதா....
பாரதி புதுமைப்பெண்ணை
காணவேண்டுமென்றான்..

ஆனால் இன்று
பெண்மை ஒரு
வியாபார
பொருளாகவோ
மாறி வருகிறது..

போற்ற வேண்டிய
பெண் சீரழிக்கப்படுகின்றாள்
ஏழைக்கு ஒரு
பருக்கை சோறு
கொடுக்க மனமில்லை
பார்ட்டி என்ற
பெயரில் உணவு
குப்பையாய் கொட்டப்படுகிறது..
வீணடிப்பதையும் ஒரு
கூட்டம் பெருமையாய்
பார்க்கிறது..
நவீன வசதிகள்
நாகரிகத்துக்கு
மேலே மனிதப்பண்புகளை
சாகடிக்கின்றன...

மானிடம் வாழ
சுயநலம்
மாறனும்...
பெருமை எல்லாம்
தொலையனும்...
நாளைய சந்ததி
வளம்பெற
அவாக்கொண்டால்
தீயன களைவோம்
மானிடா..

எழுதியவர் : (3-Mar-18, 1:37 am)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
பார்வை : 44

மேலே