தெய்வத்திருமகள்
விசித்திரமாய்ப் பார்ப்பதற்கு
வேற்றுகிரகவாசியும் அல்ல!
ஓரமாய் ஒதுக்கி
வைப்பதற்கு
தீண்டத்தாகாதப்
பிறவியும் அல்ல!
விருப்பும் வெறுப்பும்
நிறைந்த உன்னதப்
படைப்பும் அவளே!
வீரமும் நாணமும்
கலந்த அற்புதப்
படைப்பும் அவளே!
சிவனும் சக்தியும்
சேர்ந்த வியத்தகு
படைப்பும் அவளே!
அன்பையும் அரவணைப்பையும்
தேடும் திருநங்கை
அவளே!