அம்மா ஒரு வரம்
அம்மா ஒரு வரம்
ஔவையின் கூற்றுப்படி
அரிது அரிது,
மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு
நீங்கி பிறத்தல் அரிது
அப்படி எந்த குறையும் இல்லாமல்
பிறந்த இப்பிறப்பை
பேனி காப்பது அரிது
இதை பேனி காப்பவள் அம்மா...
இந்த மானிட பிறப்பின்
மகிமைதான் என்ன
இந்த பிறப்பில் அப்படி
என்ன ஒரு உன்னதம்
இருக்கு...?
மனிதப்பிறவியின்
உன்னதம் உறவுகள்
இந்த உறவுகளின்
உன்னதம் தாய்...
எவள் ஒருவள்
இல்லையெனில்
இந்த மண்ணில் நாம்
பிறக்க முடியாதோ
எவளை இழந்தால்
மீண்டும் பெறமுடியாதோ
அந்த மூலம் தான் தாய்
இந்த மனித வாழ்வின்
உன்னதம்...
நிலாச்சோறு
ஊட்டியவளுக்கு
தீண்டதகாச்சோறு
கொடுக்கிறோம்
வட்டியிலே
சோறுவைத்தவளுக்கு
திட்டி திட்டி
சோறுவைக்கிறோம்
நாம் ஈரமாகமல்
உறங்குவதற்கு இரவெல்லாம்
விழித்து பார்த்தவளுக்கு
அவளின் இயலாத காலத்திலே
படுக்கையில் ஈரமாக்கிவிட்டால்
மனதில் ஈரமில்லாமல் திட்டி தீர்க்கிறோம்
ஆராரோ பாடியவளுக்கு
அவளின் முதுமை
இரவிலே அவள்
உறங்காமல் எதோ
பேசினால் நாம்
மனதில் பாசமில்லாமல்
அவளை வசைப்பாடுகிறோம்
நமக்காகவே
வாழ்ந்த அவளுக்கு
கடைசி காலத்திலே
அவளின் விருப்பத்தோடு
கழிக்க வகைசெய்வோம்
இப்படி செய்தால்
இது உண்மையில்
உன்னதமான பிறப்பு
தவறினால்...???