சேரநாடு கொண்ட பாண்டியன்

மார்ச்...
முதல் நாளில் பிறந்த
முதல்வனே... முனைவனே..
ராஜேந்திரனே...
உனது இனிய இயல்பில்
முதல்வர்களுக்குள்
முதல்வன் ஆனாய்...

கனிவான கற்பித்தலில்
நிறைவான நிர்வாகத்தில்
மாணவ இதயங்களில்
ராஜேந்திரன் நீ...
ராஜாதி ராஜாவானாய்...

சிறுவாணியின் இனிப்பிலும்
இனிமையானது இவனது
பழகும் விதம்... எப்போதும்
அது ஒரே விதம்...

சோழன் ராஜேந்திரன்
சோழநாட்டை ஆண்டான்..
இந்த பாண்டியன் ராஜேந்திரன்
சேர சோழ பாண்டிய
பல்லவ தேசங்களின்
ஒட்டு மொத்த மாணவ
தேசங்களை ஆள்கிறான்...

அவன் கங்கை கொண்ட
சோழன்..
இவன் சேரநாடு கொண்ட
பாண்டியன்...

கோவை இவனாலும்
வளர்ச்சி கொள்கிறது இப்போது
இவனளிக்கும் சீரிய பல
தொழில் நுட்பத்தால்...

திருநெல்வேலி...
பருத்திக்காடுகள் பார்த்து
வளர்ந்த இந்த மச்சான்
கோவை மீது ஆசை வச்சான்..
தென்னிந்திய மான்செஸ்டரையே
தனதன்பால் ஆட்டிவச்சான்..

மின்னணுவியல் புதிய
பரிமாணம் காணும்...
தொடர்பியல் தொலை
தூரம் காணும்...
இவனால்.. இவன்
கற்பிக்கும் பாடங்களால்..

இவனது கண்ணசைவில்
எட்டுத் திசைகளிலும்
பொறியியல் பூக்கட்டும்..
பொறியியல் அறிவுமணம்
ஆனந்தமயம் ஆகட்டும்...

இந்திய தேசத்தின்
வல்லரசு பட்டத்திற்கு
இவன் தரும் பட்டயங்களும்
பங்காற்றட்டும்...

ராஜேந்திரன்...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
உனது எல்லா தருணங்களும்
இனிய நினைவுகளாகட்டும்...
வசந்தங்கள் வாழ்த்தட்டும்...
🙋🏻‍♂🙏🍰🎂🌹🌺🌷😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (6-Mar-18, 9:26 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 173

மேலே