மகளிர் தின வாழ்த்துக்கள்

இறைவன் இயற்றிய
வரிகள் இல்லாத
அழகான கவிதை..
#இறைவி

அன்பின் பிறப்பிடம் அவள்..
ஆணின் அடையாளம் அவள்..
இடைநில்லாமல் இயங்கும்
இயந்திரம் அவள்..
ஈன்று எடுக்கும் தாய் அவள்..
உலகின் விலைமதிப்பில்லா
பொக்கிஷம் அவள்..
ஊமையாய் போகும் போதெல்லாம்
மௌனமாய் அழுபவள்...
எந்நிலையிலும் தன்னிலை
மாறாமல் இருப்பவள்..
ஏண்ணிலடங்கா கஷ்டங்களை எதிர்கொள்பவள்..
ஐப்பசிமாத முழுநிலவு அவள்..
ஒரு வரி கவிதை அவள்..
ஓராயிரம் கனவு அவள்..!

பெண் ஆயத எழுத்து என்பார்கள்
இந்த கவியில் நான் உங்களை
உயிர் எழுத்துக்களாய்
மாற்றிவிட்டேன்..

பிரசவிப்பது பெண்ணால்
மட்டுமே முடியும்
வார்த்தைகளை பிரசவிப்பதும்
பெண் தானே(pen)😜
நீங்கள் இல்லையேல்
கவியும் இல்லை
நீங்கள் இல்லையேல்
காதலும் இல்லை..!

தியாகம் என்ற சொல்லுக்கு
தகுதியானவவள் பெண்..
வாழ்நாள் முழுவதும் பிறருக்காக
வாழ்பவள் பெண்..

நீங்கள் சுவாசித்த காற்றால்
வாழும் உயிர்கள் நாங்கள்..

பெண்களை மதிப்போம்!!!
பெண்ணியம் போற்றுவோம்!!!
பெண்மை காப்போம்!!!

மகளிர் தினத்தில் மட்டுமல்ல
வாழ்வின் எந்நாளுமே..😊
#மங்கையர்_தின_வாழ்த்துக்கள்
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Mar-18, 9:20 pm)
பார்வை : 883

மேலே