மானும் புலியும்
காட்டிற்கு நான் சென்றேன்
ஆங்கொரு மான் துள்ளக் கண்டேன்
பக்கத்துக்கு புதர் ஒன்றில்
புலி ஒன்று பதுங்க கண்டேன்
பலி ஒன்று விழுமோ என்று நான் பதற,
பதறாத மான் பவ்வியமாய் -மனதில்
துணிச்சலோடு புலி அருகே வர கண்டேன்
புரியாத புதிரை நான் காண,
புலி கோபத்தில் உறும,
மான் ஒன்று கேட்டது,
"அனைத்துயிர்க்கும் உண்டாம் பூமி
நேற்று பிறந்து,
நாளை மரணம் நிச்சயமாம்
அதற்குள்ளே எதற்கு இழந்த வக்கிரமாம்
உனக்குள்ள உரிமை, எனக்கில்லையோ?
காலநிலை, சூழ்நிலை,
நிலம், நீர், காற்று,நெருப்பு,ஆகாயம்
என ஐம்பூதங்களால் ஏற்படுகிறது,
உடலியல் மாற்றம், உயிரியல் தோற்றம்
மற்றபடி அனைவரும் உயிர்கள் தான்" என்றது
இது கேட்ட புலி
தன் தவறு உணர்ந்ததோ, என்னவோ!
இருக்கும்வரை இயல்பாய்
இனிமையை, இன்பமாய்,வாழ்வோம் என
வீறு நடை போடக் கண்டேன்
மான் மகிழ்ச்சியில் துள்ளக் கண்டேன்.
-கலைப்பிரியை