காதல் நீர்
மின்சாரம் பாய்ந்தது உன் சிரிப்பில்
மின்னல் வெட்டியது உன் பார்வையில்
என் போர்வையில் கள்ளமாய் நீ நுழைந்து
உன் நினைவுகளால் என் நித்திரையை
தினமும் நிர்மூலப்படுத்துகிறாய்
நீர் வரத்து நின்று காய்ந்த
வயல் வரவை போல்
என் நெஞ்சு காய்ந்து
சருகாகிக் கிடக்கிறது
உன் தரிசன மதகின் தாள்கள்
இப்போது அடைபட்டுக் கிடப்பதால்
இத்தனை நாளும் என் காதலை
அங்கே தேக்கி வைத்தது போதும்
உன்னிதய வான் கதவை எனக்காக
இப்போதே திறந்து விடு
உன் காதல் நீர்ப் பிரவாகம்
எங்கும் இடைவிடாது என்னில் பாயட்டும்
வெடித்து வெறுமையான
என்னிதயக் கோடை நிலம்
அதனால் நன்கு செழிக்கட்டுமே!
ஆக்கம்
அஷ்ரப் அலி