காதல் வலி - 73

காதல் வலி - 73

அன்பே
நீ கடல்
என்னை அலையவைப்பதால்
நீ மடல்
என்னை உன் முகவரி தேடி அலையவைப்பதால்

நீ பூமி
என்னைச் சுற்றவைப்பதால்
நீ சாமி
என் வேண்டுதலை ஏற்க மறுப்பதால்

நீ சூரியன்
என்னைச் சுட்டெரிப்பதால்
நீ சந்திரன்
என்னைக் காயவைப்பதால்

நீ மேகம்
என்னை அழ வைப்பதால்
நீ ராகம்
என்னைப் மயங்கவைப்பதால்

நீ சாலை
என்னைத் தேயவைப்பதால்
நீ சோலை
என்னை மேயவைப்பதால்

நீ காலை
என்னை விடியவைப்பதால்
நீ காளை
முட்டாமல் என்னை மடியவைப்பதால்

எழுதியவர் : குமார் (10-Mar-18, 1:17 pm)
பார்வை : 509

மேலே