முதுமொழிக் காஞ்சி 46
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நேராமற் கற்றது கல்வி யன்று. 6
- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று.
பதவுரை:
நேராமல் - ஒன்றுங் கொடாமல், கற்றது - ஓர் ஆசிரியனிடத்தில் கற்றது,
கல்வி அன்று - கல்வியாகாது.
கற்பிக்கும் ஆசிரியனுக்குப் பொருள் கொடாமல் கற்றது கல்வியென்னும் பெயர்க்கு உரியதாகாது.
'நேராமை' - 'தேராமை' - பாடபேதம். ‘தேராமைக் கற்றது' என்ற பாடத்துக்கு, உண்மையான பொருளைத் தெரியாமல் கற்றது கல்வி என்கிற கணக்கில் சேர்ந்ததாகாது என்று பொருள் கொள்வது.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
