விழி கண்ட சொப்பனம்
அவள்…
விழியின் விந்தையில் வீனனை வீரனாக்குவாள்
வீரனையும் வீனனாக்குவாள்..!
அவள்…
விழியின் இமை சிமிட்டலின் எழிலை- பார்த்தால்
பார்ப்பவரின் இதயத்துடிப்பும் ஒரு வினாடி நின்று ரசித்த பிறகு துடிக்கும்..!
அவள் விழி என்னைக் காண- என்
விழியோ அவள் விழியைக் கண்டது..
அவள் விழி வழி மனதில் ஒளிந்திருக்கும் என்னை- எனக்கு
மட்டும் காட்டிக் கொடுத்தது-அவள் கருவிழி..!
பிறகு…
இரு விழியும் ஒரு பாதையில் பயணிக்க நேசம் என்ற-வலையில்
சிக்கியது..!
பின்பு ஏதோ ஒரு சப்தத்தில் “(என்)” விழி விழித்துக் கொண்டது..
விழி கண்ட சொப்பனத்திலிருந்து…
“எல்லாம் கனவா 😦 “
ஆனால் என்னவோ- சொப்பனத்தில் கண்ட விழியோ
இன்னும் மனதில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது 🙂