அவன் பார்வை
உன் பார்வையில் என்ன மாயமோ
நான் அறியேன் ஒரு நாள் உன்னை
பார்க்கவில்லை என்றாலும் என்
மனம் தவிக்கின்றது படபடத்து
கண்கள் உறங்க மறுக்கின்றது
அறுசுவையும் கசக்கின்றது
பித்து பிடிக்கின்றது
உன் பார்வையில் என்ன மாயமோ
நான் அறியேன் உன்னைப் பார்த்த
உடனே என் கண்கள் பரவசம் அடைய
மனமும் நிலவாய்க் குளிர்கிறது
மனதில் ஊக்கம் பொங்க தாயைக்
கண்ட கன்றுபோல் துள்ளி ஆடுகிறது
உன்னை அணைத்திட கன்னத்தில்
முத்தங்கள் தந்திட மோகம் தீர்ந்திட
காமம் அணைந்திட காதல் ஒளிர்ந்திட
நம் உறவைக் காத்திட , காதல் உறவைக்
காத்திட ....... உன் பார்வை அதில்
பதிந்தது என்ன சொக்குபொடியோ
நானறியேன் என்னை இப்படி
நித்தம் நித்தம் பித்தாக்கிறதே
ஒரு க்ஷணமும் நீ வாராது போகையிலே
எப்போதும் உன் பார்வைக்கு நான் அடிமை
அது நம் காதலுக்கு உதய சூரியன்
இந்த கமலத்தை மலரவைக்கும்
உத்தம பார்வை ஸ்பரிசம்