என் மனது
எப்போதேனும் வரும் மழையை நம்பி
ஏங்கி கிடக்கிறது
என் மனது
தினமும் வந்து மறையும்
திங்கள் போல்
நின் நினைவுகள்
நீண்டு கொண்டேயுள்ளது
இருந்ததும்
நீ இல்லாத உன்
நினைவு இல்லாத
நீண்ட பயணத்தை தொடங்குகிறது மனது
திரும்பியும்
தொடங்கிய இடமே
வந்து சேர்கிறது
தன்னையும் அறியாமலே.