நான் ஒரு ராணுவ வீரன்
இதற்க்கு முன் நான் உணர்ந்ததில்லை,
அனைத்துமுள்ளது,
இருப்பினும் உணர்கிறேன் வெற்றிடம்.
கலப்படம் நிறைந்த உலகில்,
காவல் பணியை கொள்கிறேன்!
கடுங்குளிரா? கவலையில்லை!
சுடும் வெயிலா? பரவாயில்லை!
கொட்டும் மழையா? கணக்கேயில்லை!
தாயவள் மடியில் கொண்ட உறக்கம்,
போனதன் காரணம்
தாய்நாட்டின் மீது கொண்ட கிரக்கம்,
வெற்றிடம் நிறைந்தது
விடுமுறை கிடைத்தது
ஆனந்ததிற்க்கு வார்த்தைகளில்லை
ஊர் போகும் தூரமது தெரியவில்லை
தாயவள் முகம்கான பொறுக்கவில்லை
கடகடவென ரயில் ஒட
படபடவென ஊர் சேர
தாயவள் முன் நின்றேன்
வீட்டில் கரிசோறு
நண்பனுடன் சுற்றும் பல ஊரு
ஊருக்குள் காட்டும் பல ஜோரு
மாமன் மகள்களோ எத்துனை பேரு
ஊரே சேர்ந்திழுக்கும் திருவிழாத் தேரு
சண்டைக்குமுண்டோ கணக்கு, அதுவேரு
இதைக்காட்டினும் சொர்க்கமுண்டோ அதைக் கூறு
முடிந்தது விடுமுறை,
பிரியாவிடை கொடுத்து,
சூழ்ந்தது வெற்றிடம்.
தாயவளிடம் தொலைந்த என்னை,
நண்பனின் கண்கட்டு விளையாட்டில் மறைந்த என்னை,
தேடியே ஏறினேன் விரைவு ரயிலில்!
காலத்தின் கட்டாயம்,
மாயவுலகை மறுபடி கொண்டேன்,
கைப்பேசியின் உலகம்,
இருக்கிறாள் அன்னை அணைக்கமுடியாது தூரத்தில்,
எங்கோ கதைக்கிறாள் அக்கா,
கைப்பேசியில் உரையாடல் வாழ்க்கையாகியாது,
நண்பனின் தேடல் whatts app-ல் போனது,
காதலியவள் பேச்சு காதோடு போனது,
நிமிர்ந்த நடையினிலே,
தாயவளை காக்க வேடமனிந்தேன்,
மீண்டும் ராணுவ வீரனாக!!!!