பகலுண்ணி தாவரம்

நீள்கிறது...சட்டென
நெளிந்தது...
நகர பெருத்தும்
யூகிக்க தோற்கும்
அவலத்தில் ஒருகணம்
அகன்று சிறுத்தும்.
பயத்தில் மனம்
கிலியுற்ற வண்டாய்...
எதற்காக இப்படி
முளைத்து சதா
சுற்றி அலைகிறது...
பசித்தால் சாப்பிடுமோ?
பேசிப்பார்த்ததில்லை
வலியற்ற உராய்வில்
தரையில் மிதக்கும்
அது நகர்வா...
மரண வருகையை
மோப்பம் கொள்கிறதா?
ஒருவேளை அது
பகலுண்ணி தாவரமோ...
என்னை மனம்
சலித்தது விடாமல்...
இரவில் கேட்டது
நான் உன்னிடமா?
இல்லை அதனிடமா?
பதிலற்று கிடந்தேன்...
இரவையும் துளைக்க
இன்னும் என்செய்யும்
என் நிழல்...

எழுதியவர் : ஸ்பரிசன் (25-Mar-18, 6:41 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 99

மேலே