நவீன சிறைச்சாலை
இங்கு விலங்குகளோ
கைதிகளின் பிடியில்...
உறவுகளோடு உரையாடுகையில்
வார்த்தைகளை விரல்விட்டு
எண்ணினால்
நான்கு மீதமாகும்...
உண்ணும் போது கூட
கண்கள் தொலைக்காட்சியில்
ஒரு கை கைபேசியில் மேய்கிறது...
லைக்குகளில் லயித்துகிடக்கிறது
எண்ணம்...
கணினி களைப்பானால்
மீண்டும் கைப்பேசி
அணைத்துகொள்கிறது..
பைனரி பைத்தியத்திற்க்கு
தண்டனை கிடையாது
குற்றமே தண்டனை!
ஏனெனில்?
நாம் வாழ்வது
நவீன சிறைச்சாலையில்...