காதல் பயணம்
ஒளி குன்றா யிருவிழி கண்ட
நங்கை சுடர்விழி - யெம்மனமோ
பொங்கி யெழுந் துவீழ - நறுந்தேனில்
மிதந்த சிற்றெரும்பின் பயணமாய் காதல்!
முடிவறியா ஆற்றினில் நாவாய் பயண மெழில்சூழ
யியற்கை யழகு விருந்தாகு கயலாய்
முடிவறியா நடையாய் காதல் இருமாங் கிருளாய்
இன்பொளி சுடரு மவள் நினைவாய் சிந்தை!
புது சிறகை விரித்து பறக்கத்
துடிக்கும் பறவை மகிழ்வாய்
புது காதல் தொடுத்து யிதமாய்
துடித்து பறக்கு முள்ள மகிழ்ச்சி!
மழை சிதறிப் பூத்தவான வர்ண மேவி
குறுநடை யிட்டு கொஞ்சும் புறாவாய்
இதயமலர் பூத்த காதலர் - கரம்
இணைந்த நடையாய் கொஞ்சு மிருமனங்கள்!
நறுவீ மொட்டுக்கள் தேன் சுனைய
தேன் சிட்டுக்கள் முத்த நிசப்தங்களாய்
விரிமலர் மொட்டுக்கள் போட்ட சண்டை
நொடியி லினைந்த ஈரிதழ் முத்தங்களாய்!
காதல் பயணம் ....