உனக்காக காத்திருந்தேன்

உனக்காக காத்திருந்தேன்
எனது உறக்கத்தையும் தியாகம் செய்தேன்
எனது உள்ளத்தினையும் உன்னிடம் தந்து விட்டேன்
உனக்காகவே காத்திருந்தேன்
நீ வந்து விடுவாய் என்று .......
நீ வந்து விடுவாய்
எனக்காக வருவாய்
உள்ளம் உருகி காத்துக்கிடக்கின்றேன்
ஒவ்வொரு நொடியும் உமக்காக செலவு செய்தேன்
நீ வருவாயென்று
விழிகளில் கண்ணீர் தேக்கவில்லை
ஆனால் நீ போன வாயிலையே எதிர்நோக்கி கொண்டிருக்கின்றேன்
நீ வருவாயென்று
என் உள்ளமே உன் வசமிருக்க
ஏனோ தெரியவில்லை
உன் உள்ளம் இங்குள்ளதா என்று சந்தேகம் வேறு எமக்கு
போதும் இந்த சங்கடங்கள்
விரைந்து வா
காத்துக்கிடக்கின்றேன்
உமக்காக நம்பிக்கையுடன் நான் ..........

எழுதியவர் : பிரகதி (30-Mar-18, 8:28 pm)
பார்வை : 581

மேலே