ஐம்பெரும் பூதங்கள்

தீ ,தீயது எப்போது ,
உன்னை அது அழிக்கும்போது,
அனலாய் ஜுரமாய்
உன்னுள் தகிக்கும்போது
மனதில் தீய சிந்தனை
வளரும்போது , அடங்கா
காமத் தீயாய் மாறும்போது

தீ , நல்லது
தீபமாய் அது எரியும்போது
மனதில் அதனால்
நல்லொளி பெருக்கும்போது

நீர் தீயது , அது
வெள்ளமாய்ப் பெருகி
துயர் தரும்போது
நீராய் உடலில்
பெருகிவிடும்போது
ரோகமாய் மாறிவிடும்போது

நீர் நல்லது
வேட்கையைத் தீர்க்கும்போது
நிலத்தை வாழவைக்கும்போது
மழையாய் மாறும்போது
உலகில் வாழ்விற்கு ஜீவாதாரமாய்
இருக்கும்போது

காற்று, தீயது
புயலாய் மாறும்போது
மாசு படிந்திருக்கும்போது
உடலைவிட்டு பிரியும்போது
தீயுடன் சேர்ந்து தீமை
விளைவிக்கும்போது

காற்று நல்லது
தென்றலாய் நம்மை அணைக்கும்போது
ஸ்வாசமாய், ஜீவனாய் மாறும்போது

மண் நம்மை வாழவைக்கும் தாய்
நம்மை நம் பாவங்களைத் தாங்கிக்கொள்வது
இருக்கும்போதும், போனபின்னும்
நம்மைத் தாங்குவது
என்றும் நல்லது மண்னோன்றே

பகலில் கதிரவன், இரவில் திங்களும்
விண்ணில் இருந்து மண்ணை
ஒளி தந்து காக்குமென்றால்,
அவை இருப்பது விண்ணில் அல்லவா
நம் மனம் துன்புற்றபோது
இறைவனை நாம் பார்க்க எண்ணுவது
விண்ணை நோக்கி
நீலமாய்த் தானும் , கடலுக்கும்
நீலம் தந்து ,' நீல' நிறத்தில்
கடவுளை காணவைப்பது
வானமே, அதன் எல்லை
நமக்கு தெரியாது
அதன் எல்லையில் இருந்து
நம்மை 'அவன்' பார்க்கின்றானா
அந்த எல்லை இல்லாதவன்?
அந்த விண்ணையும்,மண்ணையும்
படைத்தவன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Apr-18, 6:32 am)
பார்வை : 249

மேலே