சொந்தம் பந்தம்
சொந்தம் என்ற உறவுக்குள்ளே
எத்தனையோ முரண்பாடு இருந்தாலும் ,
அவையில்லா வாழ்க்கை
வெறும் மூலாம்பூசிய பொருள்களாகும்,
தமிழால் கதைபேசி மகிழவும்,
தலைமுறைகள் தலை தூக்கி வாழவும்,
என்றும் தேவை சொந்தமும் பந்தமும் ,
கோடி தெய்வங்கள் இருந்தாலும் குலம்
காக்கும் தெய்வத்திற்கு இணையில்லை,
ஆயிரம் இருந்தாலும் ஒருபானை பொங்கலுக்கு
அடைந்திடும் ஆனந்தத்துக்கு அளவேயில்லை
இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் உலகம்,
சொந்தமும் பந்தமும் இருப்பதுதான் வாழ்க்கை