குரங்கு குல்லா

நீங்கள்
பாடம் செய்யப்பட்டவர்...
நீங்கள் பேசுவதும்
இனி பேசவிருப்பதும்
என் விருப்பங்கள் மட்டும்.
பசித்தவன் யோசிக்கும்
போராட்டங்கள்
உங்கட்கு இருக்காது.
பிச்சை இடுபவன் நான்.
அருந்துபவர் நீங்கள்.
உங்கள் புரட்சி வெறும்
அதிகாரப்பசிக்கு.
என்முன் குனிந்து
இடுப்புத்துண்டுடன்
நிற்கிறது ஜனநாயகம்.
வீதிக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு விழா
களியாட்டம் இன்னும்
கொண்டாட்டம்..
எப்படி இணைப்பாய்
உனது மக்களை.
ஒவ்வொரு நாளும்
நீ உன் கத்தலோடு
குலவித்திரிகையில்
வருமா மாற்றம்..?
தெரியுமா உனக்கு...
உன் வேர்கள்
என் விஷம் பருகி
பழகியதை...
உன் பீடங்கள்
தகர்ந்து போனதை...
உம் தலைமை
மமதைக்குள் உன்னை
சிறை வைத்திருப்பதை.
என் அக்குளில் இருக்கும்
அவர்களை கேட்டுப்பார்.
பேசிப்பேசியே
ஆட்சி செய்யும் நாட்டில்
நீயும் ஊளையிடலாம்.
என் கர நகங்கள்
உன் வால் அழுத்தி
காத்திருக்கும்.
இறுதியாக ஒன்று...
குல்லாக்கள் வாங்கிய
சுதந்திரம் ஒன்றுண்டு
உன் புத்தகத்தில்...
படி.கனவு காண். படி.
உண்மையில்,
குரங்கு குல்லா
குரங்குக்கல்ல...

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Apr-18, 6:52 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 126

மேலே