கலி முத்தியதுஎப்போது - ராமு-சோமு உரையாடல்
ராமு : சோமு , இன்னிக்கு என்ன புது செய்தி
நாட்டிலே, ...........................
சோமு : ஐயா, ஒன்னு கேக்கனுங்க உங்களை,..
கலி முத்தி போச்சு, கலி முத்திப்போச்சு னு
சொல்லறாங்களே........ அப்படின்னா என்னங்கய்யா
உண்மையான அர்த்தம்.....................
ராமு : நல்ல கேள்வி கேட்ட ......டேய்.... கலி என்பது
கத்திரிக்காயோ, வெண்டைக்காயோ அல்ல
முத்திப்போக, அது கலி என்ற யுக புருஷன்
இந்த கலியுக புருஷனின் ஆட்டிவைப்பு..
இதோ , இப்போது உலகெங்கும் நடக்கும்
மத வெறிப் பூசல்கள் , மதங்களின் நல்ல
போதனைகளை மறந்து, ஒரே மதத்தினர்
ஏதோ பேதங்களுக்கு ஒருவரை ஒருவர்
மாய்த்துக்கொள்ளுதல்,இனவெறி, ஜாதி வெறி
ஆசைகளின் வெறி, கற்பழிப்பு என்று அடுக்கிக்
கொண்டே போகலாம்...............இதை கீதையில்
கண்ணபிரான் கூறுகின்றான் .......இவற்றிற்கு
முடிவுகட்ட இறைவன் அவதாரம் முடிவில்....
முடிவு எப்போது..... அவனே அறிவான்............
கலி என்ற கால புருஷன் இப்படி ஆட்டி வைக்கிறான்
சோமு : மிக்க நன்றி ஐயா, இப்படி தெளிவா எனக்கு
இந்த 'கலி முத்தும்' விதத்தை கூறியமைக்கு