கனவாகிவிடாதோ
பசுமை மறக்கும் பிரதேசம்
இனிமை இழந்த இயற்கை
எங்கும், எதிலும் செயற்கை
நிலமகளை மலடாக்கிவிட்டோம்
மலடில் இருந்து உயிர்பிக்க நினைக்கிறோம்
தண்ணீர் இன்றி வறண்டது தொண்டை
சகமனிதனை கண்டே மிரண்டது மனிதம்
எங்கெங்கும் சதித்திட்டம்
தலைவர் இல்லா போராட்டம்
அகிலம் அனைத்தும் மனிதனுக்கு அடிமையாம்!!!!!!!
மனிதனோ அறிவியலின் அடிமை
சட்டமும், சாட்சியும் மட்டுமே பேசும்
சத்தியத்தை மறந்த சமூகம்
பிறர் வாட
தான் வாழ நினைக்கும் தன்னல சமூகம்
விதைப்பவனை அழித்துவிட்டு
விளைநிலத்தை விற்று விட்டு
விதைகள் வாங்கும் வித்தியாச சமூகம்
என்னே ஒரு அவலம்!
கனவுகள் நனவாக போராடும் கட்டத்தில்
இந்த பசுமை மறக்கும் பிரதேசம்
பஞ்சணையில் கண்ட கனவாகிவிடாதோ!
-கலைப்பிரியை