காதல் யுத்தம்

நம் காதல் போர்க்களத்தில்
என் இதழ் எனும் ஆயுதம் தாங்கி
நின்று கொண்டிருக்கிறேன்..
உன் உடல் முழுவதும்
முத்தங்களால் சரமாரியாக தாக்கி
உன்னை காயப்படுத்த போகிறேன்..

அதற்கு அன்பே,

என் இதழ்களுக்கு
நீ தக்க பதிலடி கொடு
உன் இதழ்களை கொண்டு..

இதழ் சேர்த்து இறுதிவரை
போராடும்
இரு உயிர்களுக்கும் தெரியும்
இப்போரில்
வெற்றி இருவருக்குமே என்று..!

காதல் யுத்தத்தை எதிர்பார்தவனாக,
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (4-Apr-18, 7:32 pm)
Tanglish : kaadhal yutham
பார்வை : 199

மேலே